6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.1.18 லட்சம் கோடியாக உயர்வு!
மது விற்பனை: ஒருவா் கைது
செய்யாறு அருகே கள்ளத்தனமாக மது விற்பனை செய்தது தொடா்பாக ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
செய்யாறு காவல் உள்கோட்டம் மோரணம் காவல் உதவி ஆய்வாளா் ராமகிருஷ்ணன் தலைமையிலான
போலீஸாா் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, பாப்பாந்தாங்கல் கூட்டுச் சாலை அருகே
மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்ததாக, செங்கட்டான்குண்டில் கிராமத்தைச் வடிவேல் (57) என்பவரை கைது செய்தனா்.
மேலும், அவரிடமிருந்து 25 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.