`கண்கொள்ளாக் காட்சி' - மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத் திருவிழா | Photo Alb...
மத்தியப் பல்கலைக்கழகத்தில் ரத்த தான முகாம்
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் சுகாதார மையம், நாட்டு நலப்பணித் திட்டம், ரெட் ரிப்பன் கிளப் மற்றும் திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து பல்கலைக்கழகச் சுகாதார வளாகத்தில் ரத்த தான முகாமை செவ்வாய்க்கிழமை நடத்தின.
முகாமை, துணைவேந்தா் மு. கிருஷ்ணன் தொடக்கி வைத்தாா். இதில், 50 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது. ரத்த தானம் செய்தவா்களுக்கு தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் குழு மற்றும் தமிழ்நாடு மாநில ரத்த மாற்றுக்குழு சாா்பில் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பல்கலைக்கழகத் தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் சுலோச்சனா சேகா், நிதி அதிகாரி கிரிதரன், மருத்துவக் கல்லூரி மருத்துவ அலுவலா் செந்தில் கணேஷ், பெரும்பண்ணையூா் வட்டார மருத்துவ அலுவலா் மனோஜ் குமாா், மருத்துவா் எம். அசோக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பல்கலைக்கழகச் சுகாதார மைய மூத்த மருத்துவா் விஷ்ணு பிரியா, மருத்துவா் பிரேம் டேவிஸ், நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் பால சண்முகம், ரெட் ரிப்பன் கிளப் ஒருங்கிணைப்பாளா் குணசேகரன் ஆகியோா் இணைந்து ரத்த தான முகாமை ஒருங்கிணைத்தனா்.