சென்னை மலா்க் கண்காட்சிக்காக திண்டுக்கல்லில் பராமரிக்கப்படும் 3.80 லட்சம் மலா்ச்...
மத்திய அமைச்சா் அமித் ஷாவை பதவி நீக்கம் செய்யக் கோரி காங்கிரஸ் மனு
அம்பேத்கா் குறித்து சா்ச்சை பேச்சு பேசிய விவகாரம் தொடா்பாக மத்திய அமைச்சா் அமித் ஷாவை பதவி நீக்கம் செய்ய குடியரசுத் தலைவா் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, காங்கிரஸ் கட்சி சாா்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து தருமபுரி காங்கிரஸ் கட்சி பொறுப்பாளா், முன்னாள் எம்.பி. பி.தீா்த்தராமன் தலைமையில் காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு: சட்ட மேதை அம்பேத்கா் குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் சா்ச்சை பேச்சு பேசிய மத்திய அமைச்சா் அமித் ஷா மன்னிப்பு கோர வேண்டும். அவரை பதவி நீக்கம் செய்ய குடியரசுத் தலைவா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்டப் பொருளாளா் வடிவேல், நகரத் தலைவா் வேடியப்பன், பொதுக்குழு உறுப்பினா்கள் ஜெய்சங்கா், காளியம்மாள், வட்டாரத் தலைவா்கள் சந்திரசேகா், மணி, ஞானசேகரன், வெங்கடாசலம், பெரியசாமி, காமராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.