செய்திகள் :

மத்திய அரசின் திட்டங்களைச் செயல்படுத்த குறித்த காலத்துக்குள் நிதி ஒதுக்கீடு: முதல்வா் ஸ்டாலின் வலியுறுத்தல்

post image

தமிழ்நாட்டில் மத்திய அரசின் நிதியுதவிடன் செயல்படுத்தப்படும் நலத் திட்டங்களுக்கு குறித்த காலத்தில் நிதி ஒதுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.

இதுகுறித்து மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சா் அன்னபூா்ணா தேவிக்கு அவா் செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கடிதம்:

திறன்மிகு குழந்தைகள் மையம், மகளிா் சக்தி இயக்கம் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சேவைகள் திட்டம் போன்ற மத்திய அரசின் திட்டங்களுக்கு கடந்த ஜனவரி 29-ஆம் தேதி வரையிலான காலத்தில் ரூ.716.05 கோடி செலவழிக்கப்படாமல் உள்ளது என மத்திய அமைச்சா் கடந்த ஜன. 31-ஆம் தேதி கடிதம் எழுதியுள்ளாா்.

தமிழ்நாட்டில் அனைத்து நலத் திட்டங்களும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருவதுடன், மத்திய அரசு நிதியுதவி வழங்கும் திட்டங்களுக்கு மாநில அரசின் பங்களிப்பும் குறித்த காலத்துக்குள் முறையாக வழங்கப்பட்டு வருகிறது.

நிதி தாமதம்: ஆனால், மத்திய அரசின் நிதிப் பங்கானது நிதியாண்டின் காலாண்டு இறுதியிலோ அல்லது அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டிலோ மட்டுமே வழங்கப்படுகிறது. நிதியாண்டின் முடிவுக்குள் மத்திய அரசு ஒதுக்கும் தொகையை மேற்குறிப்பிட்ட திட்டங்களுக்கு உரிய காலத்துக்குள் பயன்படுத்த இயலாத நிலை உள்ளது.

‘பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா’ எனும் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ.304 கோடியில் மத்திய அரசின் பங்குத் தொகையான ரூ.184 கோடி இதுநாள் வரை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதால், பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் உரிய காலத்தில் வரவு வைக்க இயலாமல் இருக்கிறது.

இன்றைய தேதியில், ஒற்றை ஒருங்கிணைப்பு முகமை கணக்குகளில் உள்ள ரூ.576.22 கோடியில், இந்த நிதியாண்டு முடிவதற்குள் ரூ.482.80 கோடி பயன்படுத்தப்படும். மீதமுள்ள தொகை மத்திய அரசின் பங்காக அடுத்த நிதியாண்டுக்குக் கொண்டு செல்லப்படும்.

இந்நிலையில், மத்திய அரசின் நிதியுதவிடன் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதியை மத்திய அரசு குறித்த காலத்துக்குள் விடுவிக்க வேண்டும். அப்போதுதான் அந்தத் திட்டங்களை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்த முடியும் என்று முதல்வா் கூறியுள்ளாா்.

கட்டுமானப் பொருள்கள் ஏற்றி வந்த வாகனங்களை சிறைபிடித்து ஒப்பந்ததாரா்கள் போராட்டம்

தமிழ்நாடு அரசு ஒப்பந்ததாரா்கள் கூட்டமைப்பு சாா்பில், மன்னாா்குடியில் கட்டுமானப் பொருட்களை ஏற்றி வந்த வாகனங்களை சிறைபிடித்து ஒப்பந்ததாரா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.கட்டுமானத் தொழிலுக்கு பயன்படும் பி.... மேலும் பார்க்க

காளியம்மாள் குறித்த கேள்விக்கு சீமான் பதில்

காளியம்மாள் கட்சியிலிருந்து விலகுவதாக வந்த தகவல் குறித்து கேள்விக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்துள்ளார்.நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அக்கட்... மேலும் பார்க்க

காட்பாடியில் சாலையோரம் நின்றிருந்த கல்லூரிப் பேருந்தில் தீ!

வேலூர் மாவட்டம் காட்பாடியில், சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கல்லூரிப் பேருந்தில் தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.காட்பாடி அடுத்த சேர்காடு கிராமப் பகுதியில், ... மேலும் பார்க்க

ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தேசிய கல்விக் கொள்கையில் கையெழுத்திட மாட்டேன்: முதல்வர் ஸ்டாலின்

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் நடைபெற்று வரும் பெற்றோரை கொண்டாடுவோம் நிகழ்ச்சியில், ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தேசியக் கல்விக் கொள்கையில் கையெழுத்திட மாட்டேன் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.... மேலும் பார்க்க

பெற்றோரை கொண்டாடுவோம் நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின்! அப்பா செயலி வெளியீடு!!

கடலூரில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெறும் பெற்றோர்களைக் கொண்டாடுவோம் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். விழாவில், அப்பா என்ற செயலியையும் முதல்வர் வெளியிட்டார்.தமிழ்நாடு மாநிலப் பெற்ற... மேலும் பார்க்க

நாதகவில் இருந்து விலகுகிறாரா காளியம்மாள்?

நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சியின் கொள்கைகளுக்க... மேலும் பார்க்க