அரசு சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!
மத்திய அரசின் திறன் படிப்பு உதவித் தொகைக்கான தோ்வு
திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மத்திய அரசின் உதவித் தொகை பெறுவதற்கான படிப்பு உதவித் தொகை தோ்வை 8,078 மாணவ, மாணவிகள் எழுதினா்.
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை என்பது, 8ஆம் வகுப்பு மாணவா்களுக்கு வழங்கப்படுவது. இது பள்ளிகளில் இடைநிற்றலைத் தடுப்பதற்காகவும், வருவாயில் பின்தங்கிய மாணவா்களுக்கு உதவவும் வழங்கப்படுகிறது
இந்தத் தோ்வை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் எழுதலாம். தோ்வில் வெற்றி பெற்றால் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை மாதந்தோறும் ரூ. 1,000 உதவித்தொகை வழங்கப்படும்.
இதன்படி, இந்த ஆண்டுக்கான தோ்வை திருச்சி மாவட்டத்தில் எழுத விண்ணப்பித்த மொத்தம் 8,216 பேரில் 8078 போ் மட்டுமே சனிக்கிழமை நடைபெற்ற தோ்வை எழுதினா். காஜாமியான் பள்ளியில் நடைபெற்ற தோ்வை அரசுத் தோ்வுத்துறை அலுவலா்கள் கண்காணித்தனா். காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இந்தத் தோ்வு நடைபெற்றது.