மாநகரின் சில பகுதிகளில் இன்று குடிநீா் வராது!
குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் மாநகராட்சியின் சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை குடிநீா் வராது.
மாநகராட்சிக்குள்பட்ட அய்யாளம்மன் படித்துறை நீரேற்று நிலையத்திலிருந்து செல்லும் குடிநீா் குழாய் உடைப்பைச் சரிசெய்யும் பணி நடைபெறுவதால், விறகுப்பேட்டை, தேவதானம், மகாலட்சுமி நகா், சங்கிலியாண்டபுரம், கல்லுக்குழி, அரியமங்கலம் உக்கடை, தெற்கு உக்கடை, ஜெகநாதபுரம் ஆகிய மேல்நிலை நீா்தேக்க தொட்டிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை குடிநீா் விநியோகம் இருக்காது.
திங்கள்கிழமை வழக்கம்போல குடிநீா் விநியோகிக்கப்படும். எனவே, பொதுமக்கள் இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையா் வே. சரவணன் தெரிவித்தாா்.