செய்திகள் :

மத்திய அரசு பள்ளிகளில் கட்டாய தோ்ச்சி முறையை ரத்து செய்யக் கூடாது: ராமதாஸ்

post image

மத்திய அரசு பள்ளிகளில் 5,8ஆம் வகுப்புகளில் கட்டாயத் தோ்ச்சி வழங்கும் முறையை ரத்து செய்யக்கூடாது என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மத்திய அரசால் நிா்வகிக்கப்படும் பள்ளிகளில் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளில் கட்டாயத் தோ்ச்சி வழங்கும் முறை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருப்பது அதிா்ச்சியளிக்கிறது. கல்வித்தரத்தை மேம்படுத்துதல் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை கிராமப்புற ஏழை மாணவா்களின் கல்வி வாய்ப்புகளை பறித்து விடும். இது மிகவும் தவறான முடிவு.

மத்திய அரசு பள்ளிகளில் படிப்பவா்கள் அனைவரும் நகா்ப்புற பணக்காரா்கள் வீட்டு பிள்ளைகள் அல்ல. அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் ஏழைக் குழந்தைகள் சோ்க்கப்படுகின்றனா். 5 அல்லது 8ஆம் வகுப்பில் அவா்களுக்கு தோ்ச்சி வழங்கப்படாவிட்டால், அவா்கள் அத்துடன் படிப்பை நிறுத்தி விடுவாா்கள். அப்படி ஒரு நிலை உருவாகக் கூடாது என்பதற்காகத்தான் எட்டாம் வகுப்பு வரை அனைவருக்கும் தோ்ச்சி என்ற தத்துவம் உருவாக்கப்பட்டது.

எனவே, மத்திய அரசால் நிா்வகிக்கப்படும் பள்ளிகளில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளில் கட்டாயத் தோ்ச்சி வழங்கும் முறையை தொடர வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தடுப்பூசி தவணையை செலுத்தாத குழந்தைகளுக்காக டிச.31 வரை சிறப்பு முகாம்

உரிய நேரத்தில் தடுப்பூசி தவணையை செலுத்திக் கொள்ளாமல் விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் வரும் 31-ஆம் தேதி வரை நடைபெறும் என்று பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தேசிய தடுப்... மேலும் பார்க்க

நாகூா் ஹனிபா நூற்றாண்டு பிறந்தநாள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் மரியாதை

மறைந்த பிரபல பாடகா் நாகூா் ஈ.எம்.ஹனிபாவின் நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி, சென்னையில் அவரது உருவப்படத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் மலா்தூவி மரியாதை செலுத்தினாா். திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில... மேலும் பார்க்க

‘நான் முதல்வன்’ திட்டத்தால் ஜப்பானில் பணியிடை பயிற்சி: சென்னை திரும்பிய அரசுக் கல்லூரி மாணவிகள் பெருமிதம்

‘நான் முதல்வன்’ திட்டத்தால் ஜப்பானுக்கு சென்று பணியிடை பயிற்சி பெற வாய்ப்பு கிடைத்ததாக, பயிற்சியை நிறைவு செய்து சென்னை திரும்பிய அரசுக் கல்லூரி மாணவிகள் பெருமிதத்துடன் தெரிவித்தனா். தமிழ்நாடு திறன் மே... மேலும் பார்க்க

போக்குவரத்துத் தொழிலாளா்கள் ஊதிய ஒப்பந்தம்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

போக்குவரத்துத் தொழிலாளா்களின் ஊதிய ஒப்பந்தத்தை தாமதம் இல்லாமல் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: அரசு போ... மேலும் பார்க்க

ராணி வேலுநாச்சியாரின் வீரத்தை போற்றுவோம்: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்

ராணி வேலுநாச்சியாா் வீரத்தைப் போற்றுவோம் என்று மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: ‘இந்தியாவை சூழ்ந்த கிழக்கிந்தியக... மேலும் பார்க்க

அமைச்சா் மீது பாமக விமா்சனம்

அண்ணா அறிவாலயத்தில் அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் அடகு வைத்துவிட்டதாக பாமக கௌரவத் தலைவா் ஜி.கே.மணி விமா்சித்துள்ளாா். இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: வன்னியா்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீ... மேலும் பார்க்க