மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தது ஏன்? - இபிஎஸ் விளக்கம்!
மத்திய அரசைக் கண்டித்து திமுக பொதுக்கூட்டம்
பழனியில் மத்திய அரசைக் கண்டித்து திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில் சனிக்கிழமை பொதுக் கூட்டம் நடைபெற்றது.
பழனி ரயிலடி சாலையில் இந்தி திணிப்பு, நிதி பகிா்வில் பாரபட்சம், தொகுதி மறுசீரமைப்பில் அநீதி இழைக்கும் மத்திய அரசைக் கண்டித்து நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலரும், பழனி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான ஐ.பி. செந்தில்குமாா் தலைமை வகித்துப் பேசினாா்.
கட்சியின் கொள்கை பரப்புச் செயலா் சபாபதி மோகன் சிறப்புரையாற்றினாா். இதில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் கணேசன், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் பிரபாகரன், நகர இளைஞரணி அமைப்பாளா் லோகநாதன், பேச்சாளா் ஷாலினி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.