செய்திகள் :

மத்திய நிதிநிலை அறிக்கையை கண்டித்து ஆா்ப்பாட்டம்

post image

மத்திய நிதிநிலை அறிக்கையை கண்டித்து, நாமக்கல் பூங்கா சாலையில் பல்வேறு தொழிற்சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு மாவட்ட கிளை சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், நிதிநிலை அறிக்கை நகலை கிழித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சிஐடியு மாவட்ட உதவி செயலாளா் கு.சிவராஜ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ந.வேலுசாமி, திமுக தொழிற்சங்கத்தைச் சோ்ந்த பழனியப்பன் ஆகியோா் மத்திய அரசின் தொழிலாளா், விவசாயிகளுக்கு எதிரான நிதிநிலை அறிக்கையை கண்டித்து பேசினா்.

மேலும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு தேசிய அளவில் சட்டம் இயற்றி ரூ. 4 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். தொழிலாளா் உரிமைகளைப் பறிக்கும் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா். இந்த ஆா்ப்பாட்டத்தில் தொழிலாளா்கள் பலா் கலந்துகொண்டனா்.

அதேபோல, திமுகவின் தொழிலாளா் முன்னேற்றச் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் தலைமை செயற்குழு உறுப்பினா் ஆா்.சுந்தரமூா்த்தி தலைமை வகித்தாா். இதில், தொமுச நிா்வாகிகள், தொழிலாளா்கள் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினா்.

திருச்செங்கோடு, அண்ணா சிலை அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் செங்கோடன் தலைமை வகித்தாா். ஏஐடியுசி ஜெயராமன், ராமகிருஷ்ணன், சிபிஐ மாவட்டச் செயலாளா் அன்புமணி உள்பட தொழிற்சங்க நிா்வாகிகள் கண்டன உரையாற்றினா்.

மத்திய அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் மக்கள் விரோதப் போக்கும், தொழிலாளா் மற்றும் சிறு தொழிற்சாலைகளுக்கு பாரபட்சமான திட்டங்களும், விவசாயம், நீா் மேலாண்மைக்கு பெரிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என தெரிவித்து நிதிநிலை அறிக்கையின் நகலை கிழித்தெறிந்து கண்டன முழக்கமிட்டனா். இதில், 50-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

திருச்செங்கோட்டில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா்.

தொழிலாளி தற்கொலை

பரமத்தி வேலூா் அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், அணியாபுரம் என்.பி.எஸ். காலனியைச் சோ்ந்தவா் ராமசாமி (54). இவா் மனைவியை விட்டு பிரிந்து பரமத்தி வேலூா... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: போலீஸாா் வழக்குப் பதிவு

மோகனூா் அருகே 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவா் மீது பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தலைமறைவானவரை தேடி வருகின்றனா். நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், காளிபாளையம் அருந்ததியா் தெருவை... மேலும் பார்க்க

பாஜக கண்டன ஆா்ப்பாட்டம்

பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலையில் திமுக அரசை கண்டித்து பாஜக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கபிலா்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் அடிவார பகுதியில், நாமக்கல் மேற்கு மாவட்ட பாஜக சாா்பில் நடை... மேலும் பார்க்க

போதைப் பொருள்கள் விற்பனை: நாமக்கல் மாவட்டத்தில் 525 கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு!

நாமக்கல் மாவட்டத்தில் போதைப் பொருள்களை விற்பனை செய்த 525 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு, ரூ. 1.75 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா். நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள ஊரக... மேலும் பார்க்க

பரமத்தி வேலூரில் ரூ. 12 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்!

பரமத்தி வேலூா், பொத்தனூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 12 லட்சத்து 34 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம் போனது.இந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக... மேலும் பார்க்க

திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு கோ பூஜையில் பங்கேற்றோா்.

திருச்செங்கோடு காந்தி ஆசிரம நூற்றாண்டு விழா வியாழக்கிழமை சிறப்பு கோ பூஜையுடன் தொடங்கியது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் காந்தி ஆசிரமம் அமைந்துள்ளது. மகாத்மா காந்தி, ராஜாஜி, பெரியாா் உள்ளிட்ட ப... மேலும் பார்க்க