``மனநிலை பாதிப்பு... விஜய்யின் வளர்ச்சி சீமானுக்கு புடிக்கல..'' -சீமானை சாடிய புகழேந்தி
விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு சீமானுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது என்று அதிமுக ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் புகழேந்தி தெரிவித்திருக்கிறார்.
செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, “ ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருக்கிறேன். நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்த பிறகுதான் சீமானுக்கு அச்சம் ஏற்பட்டிருக்கிறது.
அவர் கட்சி ஆரம்பித்தால் இவருக்கு என்ன? மனநிலை பாதித்து கத்த வேண்டிய காரணம் என்ன? விஜய்யின் வளர்ச்சி சீமானுக்கு பிடிக்கவில்லை. திருமாவளவனிடம் பயிற்சி எடுத்துக்கொண்டுதான் சீமான் அரசியலுக்கு வந்தார். ஆனால் திருமாவே சீமான் சரியான மனிதர் இல்லை. இவர் செய்கின்ற செயல் சரியாக இல்லை என்று சொல்கிறார்.
செருப்பை காண்பிப்பது, கெட்ட வார்த்தைகளில் பேசுவது, மரியாதை இல்லாமல் பேசுவது போன்ற தவறான செயல்களில் ஈடுபட்டு வருகிறார். பெரியார் குறித்த சீமான் விமர்சனத்துக்கு முதல்வர் பதில் சொல்ல வேண்டும். சீமானை கைது செய்ய வேண்டும். இதனை செய்யவில்லை என்றால் திராவிட இயக்கங்கள் பெரியாரை தலைவர் என்று சொல்ல முடியாது" என்று பேசியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs