செய்திகள் :

`மனைவியிடம் செலவுக்கு பணம் வாங்குவது கவுண்டமணி சார் சென்டிமென்ட்.!’ - மேனேஜர் மதுரை செல்வம்

post image

தமிழ் சினிமாவின் நகைச்சுவை சக்கரவர்த்தியான கவுண்டமணியின் மனைவி சாந்தி, உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார். குடும்ப வாழ்க்கை தனி, சினிமா வாழ்க்கை தனி என்று வாழ்ந்து வரும் கவுண்டமணி அவரது மனைவி மற்றும் குழந்தைகளை தனது நெருங்கிய உறவினர்களின் வீட்டு விசேஷங்கள் தவிர வேறு எந்த இடத்திற்கும் அழைத்து வந்ததில்லை.

அவரின் பட பூஜைகளுக்கு கூட, சிங்கிள் மேன் ஆர்மியாகத்தான் வந்திருக்கிறார். கடந்த சில தினங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த சாந்தி, இன்று காலை காலமானார். அவரது மறைவு குறித்து கவுண்மணியின் மேனேஜரும், படத்தயாரிப்பாளருமான மதுரை செல்வம், பகிர்ந்த விஷயங்கள் இங்கே.

சாந்தி

காதல் திருமணம்

''மனைவியின் இழப்பினால் மனம் கலங்கிப் போயிருக்கிறார் கவுண்டமணி. கணவன் - மனைவி அந்நியோன்யம்னா அப்படி ஒரு அந்நியோன்யமாக இருவரும் இருப்பார்கள். ஒருவரை ஒருவர் ரொம்பவே பாசமாக பார்த்துப்பாங்க. இவர்களது திருமணம் காதல் திருமணம். சினிமாவின் ஆரம்பகாலங்களிலேயே இவர்களது திருமணம் நடந்தது. கல்யாணத்திற்கு பின்னால் ஏற்றம் வரும் என்பார்கள். அந்த வார்த்தை கவுண்டமணி சார் விஷயத்தில் உண்மையானது.

மனைவி வந்த நேரம் நல்ல நேரமாக அவருக்கு திரையுலகில் திருப்புமுனையாக அமைந்துது. ஆகையால் மனைவி மீது ரொம்பவே தனி பிரியம் வைத்திருந்தார். வீட்டிற்கு வந்தாலே 'சாந்தி.. சாந்தி...' என கூப்பிட்டபடி இருப்பார்.

மதுரை செல்வம்

வீட்டு நிர்வாகம், குழந்தைகளை வளர்த்து ஆளாக்கியது எல்லாமே சாந்தி அவர்கள்தான். கவுண்டமணி சார் பேமென்ட் வாங்கினால் அப்படியே மனைவியிடம் கொடுத்துவிட்டுவார். அவர் வீட்டை விட்டு வெளியே கிளம்புகையில் மனைவியிடம் செலவுக்கு பணம் வாங்கிக் கொள்வதை சென்டிமென்ட் ஆக வைத்திருப்பார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் பெரிய பொண்ணு செல்வி, ரெண்டாவது மகள் ஸ்மிதா. மகள்களும் அம்மா மீது அதிக பாசம் வைத்திருந்தார்கள்.

சாந்தி அவர்கள் சில காலமாகவே உடல்நலமில்லாமல் இருந்தார். அவரது மறைவு கவுண்டமணி சாருக்கு பெரிய இழப்பு. நண்பர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் சொல்லி வருகிறோம். நாளை காலை 11 மணியளவில் சாந்தி அவர்களின் இறுதி சடங்கு நடக்கிறது.'' என்கிறார் மதுரை செல்வம்.

Samantha: "நான் மேடைகளில் கண்கலங்கி எமோஷனல் ஆகிறேனா...” - வீடியோ வெளியிட்ட நடிகை சமந்தா!

நடிகை சமந்தா தயாரிப்பாளராக உருவெடுத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளின் நடித்த சமந்தா, தற்போது தயாரிப்பாளராக மாறியுள்ளார். பிரவீன் காண்ட்ரேகுலா இயக்கத்தில் மே 9 ஆம் தேதி வெளியாக உள்ள ”... மேலும் பார்க்க

Thalaivan Thalaivi : புரோட்டா மாஸ்டராக விஜய் சேதுபதி - அழகான காதலுடன் ஆக்ஷன் டச்!

இயக்குநர் பாண்டிராஜ், நடிகர் விஜய் சேதுபதி, நடிகை நித்யா மேனன் ஆகியோரை வைத்து ஒரு படத்தை எடுத்து முடித்திருக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதியுடன், நித்யா மேனன், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்தி... மேலும் பார்க்க

'அண்ணனுக்கு எல்லாமே அவுங்கதான்...' - கவுண்டமணி மனைவி மறைவுக்கு சத்யராஜ், நிழல்கள் ரவி இரங்கல்

நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 67. திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சத்யராஜும், நிழல்கள் ரவியும்... மேலும் பார்க்க

STR 49: `அவர் இமேஜ் பாதிக்காம இருக்கணும்' - சிம்பு சொன்ன கண்டிஷன்; சந்தானம் இணைந்து இப்படித்தான்

சிலம்பரசன் டி.ஆர், சந்தானம் இணையும் STR 49 படத்தின் பூஜை, சமீபத்தில் நடந்தது. அதனைத் தொடர்ந்து எப்போது படப்பிடிப்பு தொடங்கும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில் சந்தானம் இணைந்திரு... மேலும் பார்க்க

நடிகர் கவுண்டமணி மனைவி சாந்தி காலமானார் - திரையுலகம் அஞ்சலி

நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 67.தமிழ் சினிமாவின் எவர்கிரீன் நகைச்சுவை நடிகர் என்றால் அது நடிகர் கவுண்டமணிதான். சினிமாவுக்கு வந்த நாள் ம... மேலும் பார்க்க