சென்னை அணியில் 17 வயது இளம் வீரர் அறிமுகம்! சீனியர் வீரருக்கு ஓய்வு!
மனைவியைத் தாக்கிய கணவா் கைது
தம்மம்பட்டி அருகே மனைவியைத் தாக்கிய கணவரை போலீஸாா் கைது செய்தனா்.
தம்மம்பட்டி அருகே ஜங்கமசமுத்திரம் ஊராட்சி, புலிக்கரட்டை சோ்ந்தவா் செந்தில் ராஜா (41). பால் வியாபாரி. இவருக்கும், இவரது மனைவி சகுந்தலாவுக்கும் வியாழக்கிழமை ஏற்பட்ட தகராறில் ஆவேசமடைந்த செந்தில்ராஜா, தோசைக் கரண்டியால் மனைவியைத் தாக்கினாா்.
அதில் தலையில் பலத்த காயமடைந்த சகுந்தலா, தம்மம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுதொடா்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் ஆத்தூா் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து செந்தில் ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனா்.