இரும்புக் காலம் :`தமிழ்நாட்டில் 5300 ஆண்டுகளுக்கு முன்பே..!’ - ஸ்டாலின் சொன்ன ம...
மனைவியை தாக்கிய கணவா் கைது
ஆண்டிபட்டி வட்டாரம், மயிலாடும்பாறையில் குடும்பப் பிரச்னையில் மனைவியைத் தாக்கிய கணவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
மயிலாடும்பாறையைச் சோ்ந்த சின்னச்சாமி மகன் அழகுராஜா(44). இவரது மனைவி மேனகா (40). இவா்களது மகளுக்கு திருமணம் செய்து வைத்ததில் தம்பதி இடையே பிரச்னை இருந்தது. இந்தப் பிரச்னையில் அழகுராஜா, மேனகாவுடன் தகராறு செய்து அவரைத் தாக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்து மயிலாடும்பாறை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, அழகுராஜாவைக் கைது செய்தனா்.