மனோஜ் பாரதிராஜா: `என் பக்கத்துல உட்கார்ந்துட்டு பியானோ வாசிச்ச பையன்' - கலங்கும் பியானோ டீச்சர்
வாட்ஸ் அப் குரூப் ஒன்றில், 'மனோஜ் என்னுடைய மாணவன். வெரி நைஸ் பாய்' என்று வருத்தமுடன் பதிவு செய்திருந்தார் ஒரு பெண்மணி. அவர் பெயர் ரதி மாசிலாமணி. அவரைத் தொடர்புகொண்டோம்.
''மனோஜ் என்னோட மியூசிக் கிளாஸ்ல கொஞ்ச காலம் பியானோ கத்துக்கிட்டான். என்னோட பேரப்பிள்ளைகளும் மனோஜோட மகள்களும் கிட்டத்தட்ட ஒரே வயசுன்னு சொல்லலாம். அந்தளவுக்கு சின்னப்பையன். மனோஜ் இறந்துட்டான்கிறதை என்னால இன்னமும் நம்பவே முடியலை. அவனைப்பத்தின செய்திகளைப் பார்க்கிறப்போ கண்கள் கலங்கிட்டே இருக்கு.

தான் உண்டு தன் ஜோலி உண்டுன்னு இருப்பான். ரொம்ப அமைதியான கேரக்டர். அவனைப்பார்க்கிறப்போ எல்லாம் ஹார்ம்லெஸ் (Harmless) பாய்னு எனக்குத் தோணும். அதுக்கப்புறம் நடிக்கப்போயிட்டான். அதோட தொடர்பு விட்டுப்போச்சு. பல வருஷங்களுக்குப் பிறகு என் பேரப்பிள்ளைங்களை லேடி ஆண்டாள் ஸ்கூல்ல விடப்போனப்போ, மனோஜ் அவரோட மகள்களை ஸ்கூல்ல டிராப் பண்ண வந்திருந்தார். அப்போ பார்த்துப் பேசினார். காலையில இருந்து என் ஹஸ்பண்ட் கிட்ட, 'என் பக்கத்துல உட்கார்ந்துட்டு பியானோ வாசிச்ச சின்னப்பையன். அவன் இப்படி இவ்ளோ சீக்கிரமா போயிட்டானே'ன்னு புலம்பிட்டே இருக்கேன். அவ்ளோ அருமையான பையன்ங்க அவன்'' என்று கண்கலங்குகிறார், மனோஜ் பாரதிராஜாவின் பியானோ டீச்சர் ரதி மாசிலாமணி.