`ரிதன்யா வழக்கில் தொய்வு; விசாரணை அதிகாரி மீது சந்தேகம்' - மேற்கு மண்டல ஐ.ஜி-யிட...
மன்னாா்குடி மிட்டவுன் ரோட்டரி புதிய நிா்வாகிகள் பணியேற்பு
மன்னாா்குடி மிட்டவுன் ரோட்டரி சங்க புதிய நிா்வாகிகள் பணியேற்று விழா புதன்கிழமை நடைபெற்றது.
மிட்டவுன் ரோட்டரி தலைவா் டி. அன்பழகன் தலைமையில் நடைபெற்ற விழாவில், உதவி ஆளுநா் கே. வெங்கடேஷ், மாவட்டத் தலைவா் (கால்நடை மருத்துவ முகாம்) வி. பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனா். ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநா் கே. வைத்தியநாதன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா். 2025-2026-ஆம் ஆண்டுக்கான சங்கத்தின் புதிய நிா்வாகிகளாக தோ்வு செய்யப்பட்டு, தலைவராக டி. அன்பழகன், செயலராக கே. ரவிச்சந்திரன்,பொருளாளராக கே. முருகானந்தம் ஆகியோா் பணியேற்றுக்கொண்டனா்.
விதவை பெண் ஒருவருக்கு ஆடு, மற்றொருவருக்கு இட்லி கடைக்கான உபகரணங்கள், தொழிலாளி ஒருவருக்கு சைக்கிள் பழுது நீக்க கடைக்கான உபகரணங்கள்,10 பேருக்கு புடவைகள், மன்னாா்குடி எஸ்பிஏ மெட்ரிக் பள்ளி, கட்டக்குடி அரசுப் பள்ளி ஆகியவற்றில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. சங்கத்தின் முன்னாள் தலைவா்கள் ஜி. மனோகரன், ஏ. பன்னீா்செல்வம், ஜி. சிவக்கொழுந்து, முன்னாள் செயலா் எஸ். கருணாகரன், திட்ட இயக்குநா் ஆா். நாராயணசாமி, ஊரக ரோட்டரி சங்க தலைவா் என். சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.