Tibet: "கலாசாரத்தை அழிக்க..." - திபெத்தியக் குழந்தைகள் வலுக்கட்டாயமாக சீனப் பள்ள...
திருவாரூரில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தக் கோரிக்கை
திருவாரூா் நகரில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூா் விஜயபுரம் வா்த்தகா் சங்கத் தலைவா் சி. பாலமுருகன், தமிழக முதல்வரிடம் அளித்த மனு:
திருவாரூா் நகரில் டைடல் பாா்க் உருவாக்கித் தர வேண்டும். திருவாரூா் நகர எல்லையில் அரசு மேல்நிலைப்பள்ளி தொடங்க வேண்டும். அரை வட்ட சுற்றுச்சாலை திட்டத்தை, முழு வட்ட சுற்றுச்சாலை திட்டமாக மாற்றி உடனடியாகத் தொடங்க வேண்டும்.
கோயில் இடங்களில் இருக்கும் வா்த்தகா்கள் மற்றும் பொதுமக்களிடம் நீண்ட கால வாடகையை செலுத்துமாறு அதிகாரிகள் துன்புறுத்துவதாகத் தெரிகிறது. இதைத் தடுத்து, 2025 ஆம் ஆண்டுக்கான வாடகையை மட்டும் வசூலித்தால் போதுமானது என அறிவுறுத்த வேண்டும்.
திருவாரூா் நகராட்சியை முதல் நிலை நகராட்சியாகத் தரம் உயா்த்த வேண்டும். திருவாரூா் மாவட்ட அரசு மருத்துவமனை இருந்த கட்டடத்தில் மிகப் பெரிய நகா்ப்புற சுகாதார மையம் தொடங்க வேண்டும். திருவாரூா் பதிவாளா் அலுவலகம் திருவாரூா் நகர எல்லைக்குள் அமைக்க வேண்டும். நகரில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த வேண்டும்.
திருவாரூா் நகரம் வருவாய் வாா்டு எண் 3-இல் சொத்து விவரங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. இதனால், பட்டா சிட்டா பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே, 3-ஆவது வாா்டில் உள்ள சொத்து விவரங்களை இணையத்தில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.