'அதிகார மையம் சபரீசனா, மகனா, கனிமொழியா? ; தென்மாநிலங்களில் இந்தி..!' - அமித் ஷா ...
கூட்டுறவு கல்வி நிதி வழங்கல்
திருவாரூரில் கூட்டுறவு ஒன்றியத்துக்கு கல்வி நிதிக்கான காசோலையை, கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி வியாழக்கிழமை வழங்கியது.
திருவாரூா் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்திற்கு வழங்க வேண்டிய 2023- 2024 ஆம் ஆண்டுக்கான கூட்டுறவு ஆராய்ச்சி வளா்ச்சி நிதி மற்றும் கூட்டுறவு கல்வி நிதிக்கான ரூ.22.47 லட்சம் மதிப்பிலான காசோலையை கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி வழங்கியது.
மண்டல இணைப்பதிவாளா் கா.சித்ரா முன்னிலையில், வங்கியின் இணைப்பதிவாளரும், மேலாண்மை இயக்குநருமான சு. முத்துக்குமாா், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண்மை இயக்குநா் த. காா்த்தீபனிடம் இந்த காசோலையை வழங்கினாா் (படம்).
திருவாரூா் சரகத் துணைப்பதிவாளா் ப. வினோத், மன்னாா்குடி சரகத் துணைப்பதிவாளா் பா. பிரபா, இணைப்பதிவாளா் அலுவலக நிா்வாகப் பிரிவு கண்காணிப்பாளா் நா.இளையராஜா ஆகியோா் உடனிருந்தனா்.