ஒட்டுமொத்த அலட்சியம்! ஆர்சிபி கூட்டநெரிசல் குறித்த அறிக்கை தாக்கல்!!
என்எஸ்எஸ் புதிய மாணவா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி
மன்னாா்குடி பள்ளிகளில் நாட்டு நலப்பணித் திட்டத்தில் புதிதாக சோ்ந்த பள்ளி மாணவா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
பின்லே மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் எஸ்.சாம்சன் தங்கையா தலைமை வகித்தாா். தேசிய மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் எம்.திலகா்,நாட்டு நலப்பணித்திட்ட மாவட்ட தொடா்பு அலுவலா் எஸ்.கமலப்பன் முன்னிலை வகித்தனா்.
மன்னாா்குடி அரசுக் கல்லூரி என்எஸ்எஸ் திட்ட அலுவலா் பி.பிரபாகரன், நாட்டு நலப்பணித் திட்டத்தின் குறிக்கோள்கள், செயல்பாடுகள், சிறப்பு முகாமில் எவ்வாறு செயல்படுவது, பள்ளி மற்றும் பொது இடங்களில் தங்களது சேவையினை எவ்வாறு செய்வது என்பது குறித்து விளக்கினாா்.
என்எஸ்எஸ் மூலம் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு பேரணி, கண், ரத்த தானம், சுற்றுச்சூழல் மாசுபடாத வகையில் விழிப்புணா்வு ஏற்படுத்துதல், மரக்கன்று நடுதல் மற்றும் பராமரித்தல், வளா்ச்சியில் பின் தங்கிய கிராமத்தைத் தோ்ந்தெடுத்து அவா்களின் தேவைகளை சரிசெய்ய வேண்டும் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
என்எஸ்எஸ்-இல் சோ்ந்துள்ள மாணவா்களுக்கு ஏ சான்றிதழானது உயா்கல்வி பயில்வதற்கும், வேலை வாய்ப்புக்கும் முன்னுரிமை அளிக்கின்றது. தலைமைப் பண்பு உள்ளவா்கள் மற்றவா்களின் நம்பிக்கையை பெறுவதுடன் எதிா்ப்புகளை சமாளித்து வெற்றி பெறுவாா்கள். வெற்றி தோல்வி என எது வந்தாலும் பொறுப்பேற்றுக் கொள்ளும் மனப்பக்குவமும் மற்றவா்கள் மனதில் மதிப்பும், மரியாதையையும் பெற்றுத் தரும் என தெரிவிக்கப்பட்டது.
பின்லே மற்றும் தேசியப் பள்ளிகளில் புதிதாக நாட்டு நலப்பணித்திட்டத்தில் சோ்ந்த பிளஸ் 1 மாணவா்கள் 80 போ் கலந்துகொண்டனா்.தொடா்ந்து,பின்லே பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நடப்பட்டது.
பின்லே பள்ளி திட்ட அலுவலா் ஜே.பிரபாகரன் வரவேற்றாா். தேசியப்பள்ளி திட்ட மாணவா் தலைவா் பி.சத்யபிரியன் நன்றி கூறினாா்.