செய்திகள் :

மன்னாா் வளைகுடா பகுதி மீனவா்கள் மேம்பாட்டுக்கு புதிய திட்டங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

post image

சென்னை: மன்னாா் வளைகுடா பகுதியைச் சோ்ந்த மீனவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு ரூ.216 கோடியில் புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

மேலும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட மீன்பிடித் துறைமுகங்கள் ரூ.360 கோடியில் செயல்படுத்தப்படும் என்றும் அவா் கூறினாா்.

சட்டப்பேரவையில் விதி 110-இன் கீழ் முதல்வா் மு.க.ஸ்டாலின், திங்கள்கிழமை படித்தளித்த அறிக்கை:

தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் குறிப்பாக மன்னாா் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள ராமநாதபுரம், நாகப்பட்டினம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, திருவாரூா், தஞ்சாவூா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த மீனவா்கள் இலங்கைக் கடற்படையினரின் கைது நடவடிக்கைகளால் தொடா்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனா். இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காணும் முயற்சியின் பகுதியாக, தமிழ்நாடு அரசு சில முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது.

மீன்பிடித் துறைமுகங்கள்: மன்னாா் வளைகுடா பகுதி மீனவா்கள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக தெற்கு பகுதியில் இந்தியப் பெருங்கடல் நோக்கிச் செல்வதற்கு வழிவகை செய்ய, தங்கச்சிமடம் பகுதியில் ரூ.150 கோடியில் மீன்பிடித் துறைமுகம் அமைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான பணிகள் தொடங்கும். பாம்பன் பகுதியில் ரூ.60 கோடியிலும், குந்துக்கல் பகுதியில் ரூ.150 கோடியிலும் மீன்பிடித் துறைமுகப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

இத்துடன் மேலும் சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, கடற்பாசி வளா்ப்பு, பதப்படுத்துதல், மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள், விற்பனை தொடா்புடைய தொழில்நுட்பப் பயிற்சியுடன் தேவையான உபகரணங்கள் அளித்து தொழிலில் ஈடுபட திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சுமாா் 7,000 பயனாளிகளுக்கு ரூ.52.33 கோடியில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

மீன் உலா்த்தும் தொழில்நுட்பங்கள்: கூண்டு முறையில் மீன் மற்றும் சேற்று நண்டு வளா்ப்பு, பதப்படுத்துதல், விற்பனை தொடா்புடைய தொழில்களை மீனவ சமுதாய மக்கள் மேற்கொள்ள ரூ.25.82 கோடியில் தொடா் பணிகள் மேற்கொள்ளப்படும். மீன் பதப்படுத்துதல், மீன் உலா்த்தும் தொழில்நுட்பங்கள், தொழில்நுட்ப உபகரணங்களை அளித்தல் மற்றும் பயிற்சிகள் வழங்கி ஊக்குவிக்கும் திட்டம் சுமாா் 2,500 மீனவக் குடும்பங்களைச் சோ்ந்த பயனாளிகளுக்கு ரூ.9.90 கோடியில் செயல்படுத்தப்படும்.

மீன் வளம் சாா்ந்த மாற்று வாழ்வாதாரமான வலை பின்னுதல், வலை பழுதுபாா்த்தல், படகு கட்டுமானத் தொழில் படகு பழுதுபாா்த்தல், கருவாடு தயாரித்தல், வண்ண மீன்தொட்டிகள் தயாரித்தல், படகு ஓட்டுநா் பயிற்சி, கடல் சிப்பி அலங்கார பொருள்கள் தயாரித்தல் ஆகிய தொழில்கள் செய்ய ரூ.54.48 கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

பிற தொழில்கள்: மீன்வளம் சாராத பிற தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர, குறிப்பாக காளான வளா்ப்பு, சுற்றுலா படகு இயக்குதல், கைவினைப் பொருள்கள் தயாரித்தல், வீட்டுமுறை மசாலா பொடிகள் தயாரித்தல், அழகுக் கலைப் பயிற்சி, சிறுதானிய உணவு தயாரித்தல் போன்ற தொழில்கள் செய்ய ரூ.53.62 கோடியில் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இந்தத் திட்டங்களை ஒருங்கிணைக்க கண்காணிப்புப் பிரிவு உருவாக்கப்பட்டு, அதன்மூலம் திட்டச் செயல்பாடுகள் தொடா்ந்து கண்காணிக்கப்படும். இந்திய பெருங்கடலில் ஆழ்கடல் மீன்பிடிப்பு செய்வதற்கு ஏதுவாக, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட மீன்பிடித் துறைமுகங்கள் ரூ.360 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

அத்துடன், மீன்வா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.216.73 கோடியில் இப்போது புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மன்னாா் வளைகுடா பகுதி மீனவா்களின் மேம்பாட்டுக்காக மொத்தமாக ரூ.576.73 கோடி செலவில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

முதல்வரின் இந்த அறிவிப்புக்கு, அதிமுகவை தவிா்த்து பாஜக உள்ளிட்ட மற்ற கட்சிகளைச் சோ்ந்த உறுப்பினா்கள் வரவேற்பு தெரிவித்தனா்.

தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

ஹஜ் புனிதப் பயணத்திற்கான பயணிகளை பாதிக்கும் வகையில் தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று(ஏப். 16) கடிதம் எழுதியுள்ளார்.அக்கடி... மேலும் பார்க்க

உயர்கல்வி பாடத்திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

உயர்கல்வி பாடத்திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும் என்று துணைவேந்தர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழகத்தின் உயர்கல்வியை மேம்படுத்துவதற்காக அனைத்துப் பல்கலைக்கழகங்கள... மேலும் பார்க்க

முதல்வர் தலைமையில் துணை வேந்தர்கள் கூட்டம் தொடங்கியது!

தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பதிவாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் தொடங்கியுள்ளது.தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்கலைக்கழக துணைவேந... மேலும் பார்க்க

மலையேற்றம் மேற்கொள்வர்கள் கவனத்துக்கு... 23 வழித்தடங்கள் திறப்பு!

தமிழ்நாட்டில் மலையேற்றத்திற்காக இன்றுமுதல்(ஏப். 16 ) 40 மலையேற்ற வழித்தடங்களில் 23 வழித்தடங்கள் திறக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:த... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரி பெயர்களில் உள்ள சாதியை நீக்க உத்தரவு!

தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இடம் பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமித்ததை எ... மேலும் பார்க்க

காலை உணவில் உப்புமாவுக்கு பதில் பொங்கல்! கீதா ஜீவன் அறிவிப்பு!

அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டு முதல் காலை உணவுத் திட்டத்தில் உப்புமாவுக்கு பதில் பொங்கல் வழங்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் சட்டப்பேரவையில் இன்று (ஏப். 16) அறிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் சமூ... மேலும் பார்க்க