செய்திகள் :

மன்னிப்பு கேட்பாரா இபிஎஸ்?: அமைச்சர் ரகுபதி கேள்வி

post image

சென்னை அருகே முட்டுக்காட்டில் காரில் வந்த பெண்களை விரட்டி, மிரட்டிய சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அதிமுக பின்புலம் உள்ளவன் என்பதை சுட்டிக்காட்டி, வீராவேசமாக அறிக்கைவிட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி மன்னிப்புக் கேட்பாரா? என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

திமுக ஆட்சியின் நலத்திட்டங்களால் மகளிர் முன்னேறுவதை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள் பெண்களின் முன்னேற்றத்தை தடுக்கும் வகையில் திமுக அரசின் மீது பழி போட முயற்சிப்பதும் சில நாட்களிலேயே உண்மை தெரிய வந்து அந்த முயற்சி தோல்வியடைவதும் வாடிக்கையாகிவிட்டது.

அந்த வகையில் கிழக்கு கடற்கரை சாலையில் பெண்கள் பயணித்த காரை வழிமறித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சந்துரு என்ற முக்கிய குற்றவாளி அதிமுக குடும்பத்தை சேர்ந்தவர் என தனது பின்புலத்தை அவரே ஒப்புக் கொள்ளும் வீடியோ ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. திமுக கொடியைக் காட்டி திமுக மீது பொய்யான வீண் பழி சுமத்தி அதன் மூலம் சுயநல அரசியல் செய்ய நினைத்தவர்களின் முகமூடி கிழிந்து தொங்குகிறது.

அண்ணா நினைவு நாள்: சென்னையில் நாளை (பிப்.03) போக்குவரத்து மாற்றம்

பெண்கள் மீதான பாலியல் தாக்குதல், போக்ஸோ குற்றங்கள் என அதிமுகவை சேர்ந்தவர்களும் அவர்களது குடும்பத்தினரும்தான் பெண்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர் என்பது ஒவ்வொரு குற்றச் செயலின் பின்புலத்தையும் ஆராய்ந்தால் தெரிய வருகிறது. திமுக மீது பொய் பழி போட்ட எதிர்க்கட்சிகள் இப்போது தங்கள் முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வார்கள்? வீராவேசமாக அறிக்கைவிட்ட பழனிசாமி மன்னிப்புக் கேட்பாரா? என கூறியுள்ளார்.

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு வெள்ளி யானை விருது!

திருச்சி: பாரத சாரண, சாரணியா் இயக்கத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு வெள்ளி யானை சிலை விருதும், திருச்சி மாவட்ட ஆட்சியா் மா.பிரதீப்குமாருக்கு வெ... மேலும் பார்க்க

மக்கள் மீதான பற்று தான் உண்மையான நாட்டுப்பற்று: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

மணப்பாறை: மக்கள் மீதான பற்று தான் உண்மையான நாட்டுப்பற்று. நாட்டுப்பற்று என்பது நிலத்தின் மீதான் பற்று என்பதைக் கடந்து மக்கள் மீதான பற்றாக வளர வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மணப்பாறைய... மேலும் பார்க்க

அந்த 'மாசு'பட்டவர் யார் என்று இதுவரை தெரியவில்லை?: தமிழிசை கேள்வி

சென்னை: அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில் அந்த 'மாசு'பட்டவர் யார் என்று நமக்கு இதுவரை தெரியவில்லையே? என்றவர், பத்திரிகையாளர்களின் செல்போனை பறிமுதல் செய்யும் நடவடிக்கை மிக மிக கண்டனத்துக்குரியது என பாஜக ... மேலும் பார்க்க

தேர்தல்களை கண்காணிக்க 'ஈகிள்' பெயரில் குழு அமைத்த காங்கிரஸ்!

புதுதில்லி: இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல்களை சுதந்திரமான மற்றும் நியாயமாக நடத்துகிறதா என்பதை கண்காணிக்க 'ஈகிள்' என்ற பெயரில் 8 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் கட்சி அமைந்துள்ளது. இந்த குழுவில் அஜய் மாக்க... மேலும் பார்க்க

நாட்டின் நலனை கருத்தில் கொள்ளாமல் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்: தமிமுன் அன்சாரி

மத்திய அரசின் 2025-26 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை நாட்டின் நலனை கருத்தில் கொள்ளாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மனித நேய ஜனநாயக கட்சித் தலைவர் மு. தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.இது பற்றி மனிதநேய ஜனந... மேலும் பார்க்க

கோவை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் தொடக்கம்!

கோவை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.கோவை மாநகரில் ரூ.10,740 கோடி மதிப்பீட்டில் 34.8 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டப் பணிகளுக்கான விர... மேலும் பார்க்க