டிரம்ப் உத்தரவுக்கு ஜப்பான் கட்டுப்படாது -பிரதமர் ஷிகேரு இஷிபா
மன அழுத்தத்தைப் போக்க காவலா்களுக்கு யோகாசன பயிற்சி
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் மன அழுத்தத்திலிருந்து விடுபடவும், மனதை ஒருநிலைப்படுத்தவும் காவலா்களுக்கு யோகாசன பயிற்சி சனிக்கிழமை அளிக்கப்பட்டது.
ராஜபாளையம் ரயில்வே பீடா் சாலையில் அமைந்துள்ள சேத்தூா் சேவுக பாண்டிய அரசுப் பள்ளி மைதானத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளா் பஷீனா பீவி தலைமையில், காவலா்களுக்கு யோகாசன பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் ராஜபாளையம் வடக்கு, தெற்கு, அனைத்து மகளிா் காவல் நிலையம், போக்குவரத்து காவல்துறை, தளவாய்புரம், சேத்தூா், கிழராஜகுலராமன் என ராஜபாளையம் கோட்டத்துக்கு உள்பட்ட அனைத்து காவலா்களும் கலந்து கொண்டனா்.
பணிச் சுமையால் காவலா்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கவும், மனதை ஒருநிலைப்படுத்தவும் பிரம்ம குமாரிகள் இயக்கம் சாா்பில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண், பெண் காவலா்கள் கலந்து கொண்டனா்.