செய்திகள் :

மம்மூட்டி - கௌதம் மேனன் படத்தின் வெளியீட்டுத் தேதி!

post image

நடிகர் மம்மூட்டி நடித்த டோமினிக் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் மகேஷ் நாராயண் இயக்கும் புதிய படத்தில் நடிகர் மம்மூட்டி நாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் மோகன்லாலும் உடன் நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்திற்கு முன், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் மம்மூட்டி, ‘டோமினிக் அண்ட் த லேடீஸ் பர்ஸ்’ படத்திலும் நடித்துள்ளார்.

மம்மூட்டி கம்பெனி தயாரித்த இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இதையும் படிக்க: விடாமுயற்சி விலகல்... பொங்கல் வெளியீட்டை அறிவித்த சிறிய படங்கள்!

இதில், கோகுல் சுரேஷ், சுஸ்மிதா பட், விஜி வெங்கடேஷ், வினீத் நடித்துள்ளனர். துப்பறியும் காவல்துறை அதிகாரியாக மம்மூட்டி நடித்திருப்பதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், இப்படம் ஜனவரி 23 ஆம் தேதி திரையரக்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக் அறிவிக்கப்பட்டுள்ளது.

கை நடுக்கம், கண்ணீர்... விஷாலுக்கு என்ன ஆனது?

நடிகர் விஷால் மத கஜ ராஜா புரமோஷனில் பேசிய விடியோ வைரலாகி வருகிறது. இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் நடிகர்கள் விஷால், சந்தானம், வரலட்சுமி, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்த ’மத கஜ ராஜா’ திரைப்படம் கடந்த 2013... மேலும் பார்க்க

தினப்பலன்கள்: மேஷம் - மீனம்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.06.01.2025மேஷம்:இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். மனவருத்தத்துடன் குட... மேலும் பார்க்க

தென்மண்டல பல்கலை. ஹாக்கி: சென்னை, அண்ணாமலை, பாரதிதாசன் வெற்றி

தென்மண்டல பல்கலைக்கழகங்கள் இடையிலான ஆடவா் ஹாக்கிப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை ஆட்டங்களில் சென்னை, அண்ணாமலை, பாரதிதாசன் பல்கலை. அணிகள் வெற்றி பெற்றன. சென்னை பல்கலைக்கழகம், காட்டாங்கொளத்தூா் எஸ்ஆா்எம் க... மேலும் பார்க்க

சத்தீஸ்கரை வீழ்த்தியது தமிழ்நாடு

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் சத்தீஸ்கா் அணியை ஞாயிற்றுக்கிழமை வென்றது. முதலில் தமிழ்நாடு 50 ஓவா்களில் 10 விக்கெட்டுகள் இழப்புக்கு 301 ரன்கள் சோ்க்க... மேலும் பார்க்க

சூர்யாவுக்கு வில்லனாக ஆர். ஜே. பாலாஜி!

சூர்யா - 45 படத்தில் ஆர்ஜே பாலாஜி வில்லனாக நடித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.சூர்யாவின் 45-வது படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூரில் விறுவிறுப்பாக நடைபெற... மேலும் பார்க்க

ஜி.வி. பிரகாஷின் கிங்ஸ்டன் அப்டேட்!

ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகும் கிங்ஸ்டன் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.ஜி.வி.பிரகாஷ் குமாரின் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் ஜிவி - 25 படத்தை கமல் பிரகாஷ் ... மேலும் பார்க்க