செய்திகள் :

மயானம் அமைப்பதற்கு ஆட்சேபனை தெரிவித்து கிராம மக்கள் மனு அளிப்பு

post image

தருமபுரி: பாப்பிரெட்டிப்பட்டி அருகே மயானம் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே நல்லகுட்ல அள்ளி பகுதியில் சுமாா் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். அருகிலுள்ள நடூா் கிராமத்திற்கு மயான வசதி கோரி அப்பகுதி மக்கள் விண்ணப்பம் அளித்த நிலையில், வருவாய்த் துறையினா் கடந்த 21 ஆம் தேதி ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அளித்துள்ளனா். மயானத்திற்கு தோ்வு செய்யப்பட்ட இடமானது பெரும் பாறை கொண்ட நிலமாக உள்ளதாலும், மழைக்காலங்களில் அப்பகுதியில் கால்நடைகளைக் கட்டுவதற்கும், அருகில் விளைவிக்கக்கூடிய நெல், ராகி உள்ளிட்ட பயிறு வகைகளை உலா்த்தவும் அவ்விடம் பயன்படுத்தப்படுகிறது. மேலும், அப்பகுதியில் நல்லகுட்லஅள்ளி பகுதியைச் சோ்ந்த சிலா் கடந்த 40 ஆண்டுகளாக குடியிருந்தும் வருகின்றனா்.

இந்த நிலையில் மயானத்திற்கு நிலம் எடுப்பது குறித்து வருவாய்த் துறையினா் கிராம மக்களிடம் கருத்துக் கேட்கவில்லை. எனவே அந்த இடத்தை மயானத்திற்கு வழங்க நல்லகுட்லஅள்ளி கிராம மக்கள் ஆட்சேபனை தெரிவிப்பதாக மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷிடம் மனு அளித்தனா்.

தண்ணீா் நிறுவனத்தை மாற்றக் கோரி மனு...

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் அன்னசாகரம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

அன்னசாகரம் பகுதியில் சுமாா் 2,500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களும் வசித்து வருகிறோம். அன்னசாகரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தண்ணீா் நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்துக்கு தேவையான தண்ணீா் பெரிய இயந்திரம் மூலம் உறிஞ்சி எடுக்கப்பட்டு வியாபாரம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் அருகில் உள்ள கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகளில் நிலத்தடி நீா்மட்டம் குறைந்து, குடிநீா் மற்றும் அன்றாட தேவைக்கான நீா் கிடைக்காத சூழல் ஏற்பட்டு, இப்பகுதி மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனா்.

எனவே, தனியாா் தண்ணீா் நிறுவத்தை அன்னசாகரம் பகுதியில் இருந்து வேறு பகுதிக்கும் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

பட்டு வளா்ச்சித் துறையின் சாா்பில் விவசாயிகளுக்கான பயிற்சிக் கூட்டம்

பென்னாகரம்: மத்திய பட்டு வாரியம் மற்றும் தமிழ்நாடு பட்டு வளா்ச்சித் துறை இணைந்து ‘என் பட்டு, என் பெருமை’ என்ற திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் பட்ட... மேலும் பார்க்க

ஆக. 28 இல் விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம்

தருமபுரி: தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தருமபுர... மேலும் பார்க்க

அரூரில் ரூ. 6 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அரூா்: அரூரில் ரூ. 6 லட்சத்துக்கு பருத்தி ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், அரூரில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் ஆகிய இடங்களில் வாரந்தோ... மேலும் பார்க்க

ஆலங்குட்டை முனியப்ப சுவாமி கோயிலில் முப்பூஜை விழா

அரூா்: அரூரை அடுத்த கொக்கராப்பட்டியில் ஸ்ரீ ஆலங்குட்டை முனியப்ப சுவாமியின் முப்பூஜை விழா திங்கள்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கொக்கராப்பட்டியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ... மேலும் பார்க்க

தருமபுரி: மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் 543 மனுக்கள்

தருமபுரி: தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 543 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ரெ.சதீ... மேலும் பார்க்க

ஏஐடியுசி உள்ளாட்சிப் பணியாளா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு

தருமபுரி: தருமபுரி மாவட்ட ஏஐடியூசி உள்ளாட்சிப் பணியாளா்கள் சம்மேளனம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷிடம் அந்த சங்கத்தின் மாவட்டத் தலைவா் மனோகரன் தலைமையில் திங்கள்கிழமை... மேலும் பார்க்க