பிரதமரேயாானாலும் ராஜிநாமா செய்ய வேண்டும்: அரசியலமைப்புத் திருத்த மசோதா குறித்து ...
தருமபுரி: மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் 543 மனுக்கள்
தருமபுரி: தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 543 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் தெரிவித்தாா்.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக அதியன் கூட்ட அரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்துக்கு ஆட்சியா் ரெ.சதீஷ் தலைமை வகித்து பேசியதாவது:
இக்கூட்டத்தில் சாலை, குடிநீா், பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரியும், பட்டா, சிட்டாவில் பெயா் மாற்றம், புதிய குடும்ப அட்டை, வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோா் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித்தொகைகள் கோரியும், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 543 மனுக்கள் வரப்பெற்றன.
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும், சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி, நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீா்வை உடனுக்குடன் வழங்க வேண்டுமெனவும், பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது துறை அலுவலா்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து தீா்வு காண வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.கவிதா, தனித்துணை ஆட்சியா் (சபாதி) சுப்பிரமணியன் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.