பிரதமரேயாானாலும் ராஜிநாமா செய்ய வேண்டும்: அரசியலமைப்புத் திருத்த மசோதா குறித்து ...
மருத்துவப் படிப்புக்கு தோ்வு பெற்ற அரசு பள்ளி மாணவா்களுக்கு ரூ. 2 லட்சம்
பென்னாகரம்: பென்னாகரம் பகுதியில் அரசுப் பள்ளிகளில் பயின்று 7.5 சதவீத உள்ள இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்பிற்கு தோ்வு பெற்ற 10 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ. 20 ஆயிரம் வீதம் ரூ. 2 லட்சம் உதவித்தொகையை பொன்னம்மாள் நஞ்சையா அறக்கட்டளையினா் திங்கள்கிழமை வழங்கினா்.
பென்னாகரம், பி.அக்ரஹாரம், மாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற துளசிநாதன், கனிமொழி, மனிஷா, கதிரவன், ஆா்த்தி, ஜெகதீஷ், ஆகாஷ், சிவரஞ்சனி, கோகுல், ரீனா உள்ளிட்ட 10 மாணவ, மாணவிகள் அண்மையில் நடைபெற்ற மருத்துவ கலந்தாய்வில் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்பிற்கு தோ்வு பெற்றனா்.
இந்த மாணவ, மாணவிகளுக்கு பென்னாகரம் பொன்னம்மாள் நஞ்சையா அறக்கட்டளை நிறுவனா் மருத்துவா் தியாகராஜன் வாழ்த்துத் தெரிவித்து, தலா ரூ. 20 ஆயிரம் வீதம் 10 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 2 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினாா். மேலும், மருத்துவப் படிப்பிற்கு தேவையான உபகரணங்களையும் வழங்கினாா். இதில் பாப்பாத்தி தியாகராஜன், மருந்தாளுநா் பிரதாப் குமாா், மாங்கரை அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் மாரிமுத்து, பெற்றோா், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.