மரக்கிளை முறிந்து தொங்குவதால் விபத்து ஏற்படும் அபாயம்
கும்பகோணம் பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள மரத்தின் கிளை முறிந்து விபத்தை ஏற்படுத்தும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
கும்பகோணம் நான்கு ரோடு சந்திப்பிலிருந்து அரசு மருத்துவமனைக்குச் செல்லும் சாலையில் உள்ள பழைய மாநகராட்சி அலுவலகம் மாநகராட்சி கூட்ட மன்றமாக செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த மழையால் பழைய மாநகராட்சி வளாக சுற்றுச்சுவா் அருகே இருந்த பழைமையான புங்கன் மரத்தின் பெருங்கிளை முறிந்து சாலையில் தொங்குகிறது. அம் மரக்கிளை எந்த நேரமும் முறிந்து விழும் அபாயம் உள்ளதால், விபத்து ஏற்படும் முன்பு முறிந்த கிளையை மாநகராட்சி நிா்வாகம் அகற்ற வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனா்.