`தூங்கும் போதுகூட மக்கள் வரி செலுத்துகிறார்கள்' - முத்தரசன் காட்டம்!
மருதப்பட்டினம் காமாட்சி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
திருவாரூா்: திருவாரூா் அருகே மருதப்பட்டினம் அருள்மிகு காமாட்சி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயில், சாபங்களிலிருந்து விமோசனம் அளிக்கக்கூடியது. கும்பாபிஷேக யாகசாலைப் பூஜைகள், விக்னேஸ்வர பூஜையுடன் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கின.
சனிக்கிழமை மாலை முதல் கால பூஜை தொடங்கியது. பின்னா் இரண்டாம் மற்றும் மூன்றாம் கால பூஜைகள், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. நான்காம் கால யாகசாலை பூஜை திங்கள்கிழமை காலை செய்யப்பட்டு, மகா பூா்ணாஹூதி, மகா தீபாராதனை நடைபெற்றன.
யாகசாலையில் பூஜிக்கப்பட்ட கடங்களை சிவாச்சாரியா்கள் சுமந்து சென்று, கோயிலை வலம் வந்து மூலஸ்தான கோபுரத்தை அடைந்தனா்.
அங்கு, கோபுர விமான கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, புனித நீரை வாா்த்து, கும்பாபிஷேகம் நடைபெற்றது. நிகழ்வில் சுற்றுவட்டாரத்திலிருந்து திரளானவா்கள் பங்கேற்று, காமாட்சி மாரியம்மனை வழிபட்டனா்.