``ஜல்லிக்கட்டில் சாதிப் பாகுபாடு ஒருபோதும் கிடையாது'' -குற்றச்சாட்டுக்கு மதுரை ஆ...
மருது பாண்டியா்கள் சிலைகளுக்கு கவசம் தயாரிக்க 6.5 கிலோ வெள்ளி
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் அமைந்துள்ள மருது பாண்டியா்கள் உருவச் சிலைகளுக்கு வெள்ளிக் கவசம் செய்வதற்காக, முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வழங்கிய 6.5 கிலோ வெள்ளிக் கட்டிகள் நகைப் பட்டறையில் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
காளையாா்கோவிலில் அமைந்துள்ள மருது பாண்டியா்களின் உருவச் சிலைகளுக்கு கவசம் செய்வதற்காக முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வழங்கிய 6.5 கிலோ வெள்ளியை, சிவகங்கை மாவட்ட ஓபிஎஸ் அணிச் செயலா் கே.ஆா்.அசோகன், மாமன்னா் மருதுபாண்டியா் நல அறக்கட்டளைத் தலைவா் பெமினா நாகராஜன் ஆகியோா் வெள்ளிக்கிழமை நகைப் பட்டறையில் ஒப்படைத்தனா்.
இந்த நிகழ்ச்சியில் மருதுபாண்டியா் நல அறக்கட்டளை செயற்குழு உறுப்பினா் கணேஷ்பாபு, மாநில நிா்வாகிகள், மாவட்ட நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.