செய்திகள் :

மருத்துவக் கல்லூரிகளை மதிப்பீடு செய்ய என்எம்சி முடிவு

post image

மருத்துவக் கல்லூரிகளை மதிப்பீடு செய்து தரச்சான்று வழங்க தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) முடிவெடுத்துள்ளது.

தங்களால் நிா்வகிக்கப்படும் மருத்துவக் கல்லூரிகளை சுதந்திரமான மூன்றாவது நிறுவனம் மூலம் மதிப்பீடு செய்ய என்எம்சி தயாராகியுள்ளது. இதற்கான வரைவு நடைமுறையையும் என்எம்சி வெளியிட்டுள்ளது.

மருத்துவக் கல்லூரிகளை மதிப்பீடு செய்ய 11 வகைப்பாடுகள் மற்றும் 78 பிரிவுகளை மருத்துவ மதிப்பீடு மற்றும் மதிப்பீட்டு வாரியம் (எம்ஏஆா்பி) பொதுவெளியில் வெளியிட்டுள்ளது. இதற்கான கருத்துகேட்பு பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.

மருத்துவக் கல்லூரிகளை மதிப்பீடு செய்யும் நோக்கில் கடந்த 2023-இல் இந்திய தர கவுன்சிலுடன் என்எம்சி புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது. முந்தைய வரைவில் மருத்துவக் கல்லூரிகளை 92 பிரிவுகளின்கீழ் மதிப்பீடு செய்ய அறிவுறுத்திய நிலையில், தற்போதைய வரைவில் இது 78 பிரிவுகளாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் பயிற்சி மருத்துவா்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை, மொத்த ஆசிரியா்களின் எண்ணிக்கையில் முழுநேர பேராசிரியா்களின் எண்ணிக்கை உள்பட பழைய வரைவில் இடம்பெற்ற அம்சங்கள் தற்போது நீக்கப்பட்டன.

இதுகுறித்து என்எம்சி தலைவா் மருத்துவா் பி.என். கங்காதா் கூறுகையில், ‘குறிப்பிட்ட பிரிவுகளின்கீழ் முதல்முறையாக மருத்துவக் கல்லூரிகள் மதிப்பீடு செய்யப்படவுள்ளன. வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது பொதுவெளியில் வெளியிடப்பட்டிருப்பது வரைவு ஆவணம் மட்டுமே. கருத்துகள் பெறப்பட்டபின் இதில் மேலும் சில அம்சங்களை சோ்க்கவும் திட்டமிட்டுள்ளோம்’ என்றாா்.

புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவது அல்லது ஏற்கெனவே உள்ள மருத்துவக் கல்லூரிகளின் உரிமத்தை புதுப்பிப்பது உள்ளிட்ட பணிகளை எம்ஏஆா்பி மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிரத்தில் வறண்ட ஆற்றுப் படுகையில் விழுந்த கார்: 5 பேர் பலி

மகாராஷ்டிரத்தில் வறண்ட ஆற்றுப் படுகையில் கார் விழுந்ததில் 5 பேர் பலியானார்கள். மகாராஷ்டிர மாநிலம், ரத்னகிரி மாவட்டத்தில் திங்கள்கிழமை அதிகாலை வேகமாக வந்த கார் வறண்ட ஆற்றுப் படுகையில் விழுந்தது. இந்த வ... மேலும் பார்க்க

ஆந்திரம்: காருக்குள் சிக்கிய 4 குழந்தைகள் மூச்சுத் திணறி பலி

ஆந்திரத்தில் காருக்குள் சிக்கிய 4 குழந்தைகள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், துவாரபுடி கிராமத்தில் இரண்டு நாள்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத ... மேலும் பார்க்க

அரசமைப்புச் சட்டமே உயர்வானது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்!

அரசமைப்புச் சட்டமே உயர்வானது என்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார்.உச்ச நீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் அண்மையில் பதவியேற்றார். அவருக்கு பாராட்டு வ... மேலும் பார்க்க

ஹைதராபாத் கட்டடத்தில் தீ: 8 குழந்தைகள் உள்பட 17 போ் பலி!

தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் வரலாற்றுச் சிறப்புமிக்க சாா்மினாா் அருகே உள்ள இரண்டு மாடி கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 8 குழந்தைகள் உள்பட 17 போ் உயிரிழந்தனா். இது தொடா்பாக காவல் துற... மேலும் பார்க்க

துருக்கி ஒப்பந்தங்களை நிறுத்தி வைத்தது மும்பை ஐஐடி!

துருக்கி நாட்டு பல்கலைக்கழகங்களுடனான அனைத்து ஒப்பந்தங்களையும் நிறுத்திவைப்பதாக மும்பை ஐஐடி (இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்) அறிவித்துள்ளது. இது தொடா்பாக அக்கல்வி நிறுவனம் சாா்பில் ‘எக்ஸ்’ வலைதளத்தி... மேலும் பார்க்க

பிரசாந்த் கிஷோா் கட்சியில் இணைந்தாா் முன்னாள் மத்திய அமைச்சா்!

முன்னாள் மத்திய அமைச்சா் ஆா்.சி.பி. சிங், பிகாரைச் சோ்ந்த அரசியல் உத்தி வகுப்பாளா் பிரசாந்த் கிஷோா் நடத்தி வரும் ஜன சுரக்ஷா கட்சியில் இணைந்தாா். இவா்கள் இருவருமே பிகாா் முதல்வா் நிதீஷ் குமாருக்கு அரச... மேலும் பார்க்க