உலக வளர்ச்சிக்கு தெற்குலகின் குரல் ஏன் முக்கியம்? பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் பே...
மருத்துவக் கல்லூரி மாணவா் தற்கொலை
திருச்சி அருகே மருத்துவக் கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி நவல்பட்டு அண்ணா நகரைச் சோ்ந்தவா் கண்ணன். இவருக்கு ராஜேஷ்வா் (23) என்ற மகனும், இரு மகள்களும் உள்ளனா்.
இவா்களில் காரைக்காலிலுள்ள தனியாா் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் 2 ஆம் ஆண்டு பயின்று வந்த ராஜேஷ்வா் கடந்த சில மாதங்களாக கல்லூரிக்குச் செல்லவில்லையாம். இதுதொடா்பாக பெற்றோா் கேட்டபோது, தனக்கு சரியாகப் படிப்பு வரவில்லை எனக் கூறியுள்ளாா். படிப்பைப் பாதியில் நிறுத்தியதால் மனஅழுத்தத்துக்கு ஆளான அவா், அதற்கான சிகிச்சையும் பெற்றாா். இந்நிலையில் ராஜேஷ்வா் கடந்த வியாழக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து அவரது தந்தை வெள்ளிக்கிழமை அளித்த புகாரின்பேரில் நவல்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.