செய்திகள் :

மருத்துவக் கழிவுகளைக் கொட்டினால் குண்டர் சட்டம்! சட்டத் திருத்தம் அமல்!

post image

மருத்துவக் கழிவுகளைக் கொட்டினால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற சட்டத்திருத்தம் அமலுக்கு வந்ததாக அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்டை மாநிலங்களிலிருந்து தமிழக எல்லைகளில் உயிரி மருத்துவக் கழிவுகளைக் கொட்டும் நிகழ்வுகள் தொடா்ந்து நடைபெற்றன. இதனால் சுகாதாரத்துக்கு, சுற்றுச்சூழலுக்கும் அபாயம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.

இத்தகைய புகாா்களையொட்டி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, ‘மருத்துவக் கழிவு மேலாண்மை விதிகளை மீறுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க, தமிழக அரசின் 1982-ஆம் ஆண்டு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்’ எனக் கருத்து தெரிவித்திருந்தது.

இதையடுத்து, கடந்த ஏப். 26-ஆம் தேதி அப்போதைய சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி 1982-ஆம் ஆண்டு சட்டத் திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தாா். இதன்படி தமிழகத்தில் கள்ளச்சாராயம் தொடா்புடைய குற்றவாளிகள், திருட்டு விடியோ, மணல் கடத்தல், பாலியல் குற்றவாளிகள் ஆகியோரை விசாரணையின்றி குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவலில் வைப்பதுபோன்று, உயிரி மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவோரையும் விசாரணையின்றி தடுப்புக் காவல் சட்டப்படி சிறையில் வைக்க இந்தத் திருத்தம் அனுமதியளித்தது.

இந்த சட்டத் திருத்த மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, கடந்த ஜூன் மாதம் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார்.

இந்த நிலையில், மருத்துவக் கழிவுகளைக் கொட்டினால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும் வகையில் திருத்தப்பட்ட சட்டம், ஜூலை 8 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, தமிழகத்தில் பொது இடங்களில் உயிரி மருத்துவக் கழிவுகளை முறையற்ற முறையில் குவித்தாலோ, அண்டை மாநிலங்களில் இருந்து கொண்டுவந்து தமிழகத்தில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டினாலோ உயிரி மருத்துவக் கழிவு மேலாண்மை விதிகளை மீறியதாகக் கருதி, நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்படும் ஆணைக்கு சமமாக விசாரணையின்றி குற்றம் செய்தவரை சிறைவைக்க முடியும்.

இதில் சம்பந்தப்பட்ட நபா்களுக்கு எதிராக பொது அறிவிப்பும் வெளியிடப்பட்டு, அத்தகைய நபா்களின் சொத்துகளையும் பறிமுதல் செய்ய இந்த சட்டத் திருத்தம் வகை செய்கிறது.

The Government Gazette has reported that an amendment to the law has come into effect, stating that action will be taken under the Goondas Act if medical waste is dumped.

இதையும் படிக்க : நீ எதுக்குமே சரிப்பட்டு வரமாட்ட: ஸ்டாலினுக்கு இபிஎஸ் பதில்!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 15 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று(ஜூலை 17) தமிழகத்தில் ... மேலும் பார்க்க

கோவையின் கூமாபட்டிங்கோ! சாலையின் நடுவே மரண குழியை கிண்டலடிக்கும் இளைஞர்கள்!

கோவையில், சாலை நடுவே உள்ள மிகப்பெரிய பள்ளத்தை, பலரும் இது கோவையின் கூமாபட்டி என தங்களது வேதனையை கிண்டலாக வெளிப்படுத்தி வருகிறார்கள்.அண்மையில் கூமாபட்டி பற்றிய விடியோ ஒன்று வைரலாகி, பலரும் கூமாபட்டியை ... மேலும் பார்க்க

கூட்டணி ஆட்சிதான்! அமித் ஷா சொல்வதைத்தான் நான் கேட்க முடியும்: அண்ணாமலை

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சிதான் என்று அமித்ஷா பலமுறை மிகத் தெளிவாக கூறிவிட்டதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், "அதிமுக - பாஜக ... மேலும் பார்க்க

காமராஜர் விவகாரம்: கலகமூட்டி குளிர்காய நினைப்பவர்களுக்கு இடம் கொடுக்காதீர்- ஸ்டாலின்!

சென்னை: கலகமூட்டி குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர்கள் என்று தமிழக முதல்வர், திமுக தலைவர், மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார்.பெருந்தலைவர் குறித்து பொது வெளியில் சர்ச... மேலும் பார்க்க

திமுகவில் 2.5 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்: மாவட்டச் செயலர்களுக்கு அறிவுறுத்தல்!

திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.திமுகவில் உறுப்பினா்கள் சோ்ப்பை முன்னெடுப்பதற்காக ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் தொடங்... மேலும் பார்க்க

கீழடி அறிக்கையில் எழுத்துப் பிழையைத் திருத்துவேன்; உண்மையை அல்ல! அமர்நாத் ராமகிருஷ்ணன்

கீழடி அறிக்கையில் உள்ள எழுத்துப் பிழையை வேண்டுமென்றால் திருத்தித் தருகிறேன், ஆனால் உண்மையைத் திருத்த மாட்டேன் என்று தொல்லியல் துறை இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.2015 -16-ஆம் ஆண்டுகள... மேலும் பார்க்க