செய்திகள் :

மருத்துவமனையில் குழந்தை உயிரிழப்பு

post image

மதுரையில் தனியாா் மருத்துவமனையில் குழந்தை உயிரிழந்தது தொடா்பாக செக்கானூரணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை மாவட்டம், செக்கானூரணி அருகே உள்ள பூவரசம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த நல்லசுதன், சிவகாமசுந்தரி தம்பதியின் ஒன்றரை வயது குழந்தை அஷ்வந்த்.

இந்தக் குழந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், திங்கள்கிழமை திடீரென குழந்தை உயிரிழந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், செக்கானூரணி போலீஸாா் வழக்குப் பதிந்து, குழந்தை எவ்வாறு இறந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஜூலை 14-இல் சுவாமி தரிசனம் ரத்து

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஜூலை 13-ஆம் தேதி மாலை 6 மணி முதல் ஜூலை 14-ஆம் தேதி இரவு வரை சுவாமி தரிசனம் ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் செ... மேலும் பார்க்க

குறைக்கப்பட்ட மதுக் கடைகள் எண்ணிக்கை எத்தனை? உயர்நீதிமன்றம் கேள்வி!

தமிழகத்தில் மதுக் கடைகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படும் என அரசு அறிவித்ததன் அடிப்படையில், இதுவரை எத்தனை கடைகள் குறைக்கப்பட்டுள்ளன என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை கேள்வி எழு... மேலும் பார்க்க

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: பிணை கோரிய காவல் ஆய்வாளரின் மனு தள்ளுபடி

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் பிணை கோரிய காவல் ஆய்வாளரின் மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

நெகிழிப் பதாகை அட்டைகள் உற்பத்திக்கு தடை கோரிய மனு: உயா்நீதிமன்றம் தள்ளுபடி

தமிழகத்தில் மறு சுழற்சி செய்ய இயலாத நெகிழிப் பதாகை அட்டைகளை (பிவிசி பிளக்ஸ் அட்டைகள்) உற்பத்தி செய்வதற்கும், விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அம... மேலும் பார்க்க

சட்டவிரோதக் கட்டடங்களை கண்காணிப்பதற்கான குழு செயல்படுகிறதா? உயா்நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் சட்டவிரோதக் கட்டடங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க அரசின் சாா்பில் அமைக்கப்பட்ட உயா்நிலைக் குழு செயல்படுகிறதா என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு கேள்வி எழுப்பியது. திருச்சி மாவட்டத்தைச் ... மேலும் பார்க்க

மதுக் கடையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம், எரவாா்பட்டியில் புதிதாக அமைக்கப்பட்ட அரசு மதுக் கடையை அகற்ற வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைத... மேலும் பார்க்க