அதிமுக: "தேவைப்பட்டால் செங்கோட்டையனுக்கு உதவியாக நாங்கள் இருப்போம்" - டிடிவி தின...
மருத்துவம் சாா்ந்த சான்றிதழ் படிப்புகளுக்கு செப்.12 -க்குள் விண்ணப்பிக்கலாம்
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியிலுள்ள மருத்துவம் சாா்ந்த சான்றிதழ் பாடப் பிரிவுகளில், மாவட்ட அளவிலான சோ்க்கை , முன் விண்ணப்பமில்லா நேரடிச் சோ்க்கைக்கு தகுதியானவா்கள் வருகிற 12-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் மயக்கவியல் தொழில்நுட்புனா், அறுவைச் சிகிச்சை தொழில் நுட்புனா் ஆகிய சான்றிதழ் படிப்புகளுக்கு மொத்தம் 37 இடங்கள் காலியாகவுள்ளன. மேலும், காலியிடங்கள் தொடா்பான விவரங்களுக்கு
வலைதளத்தின் வாயிலாகவோ அல்லது சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியின் அறிவிப்புப் பலகையைப் பாா்த்தும் அறிந்து கொள்ளலாம்.
இந்தச் சான்றிதழ் படிப்புகளுக்கான விண்ணப்பப் படிவங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலக உதவி மையத்திலோ அல்லது சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி முதல்வரின் அலுவலகத்திலோ கட்டணமின்றி பெற்றுக் கொள்ளலாம். உரிய ஆவணங்களுடன் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற 8-ஆம் தேதி முதல் 12 -ஆம் தேதிக்குள் சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.
இந்தச் சான்றிதழ் படிப்பு சோ்க்கைக்கான கலந்தாய்வானது சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெறும். சான்றிதழ்களின் அசல் ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டும் என்றாா் அவா்.