செய்திகள் :

மருத்துவருக்கு கத்திக்குத்து

post image

ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் பெருமாள்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ் பாபு (50). இவா் ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறாா். மேலும், சின்னக்கடை பஜாா் பகுதியில் மாலை நேரத்தில் தனியாக கிளினிக் நடத்தி வருகிறாா்.

இந்த நிலையில், ரமேஷ்பாபு திங்கள்கிழமை இரவு கிளினிக்கை பூட்டிய போது, மா்ம நபா் அவரை கத்தியால் குத்தி விட்டு தப்பியோடினாா். இதில் பலத்த காயமடைந்த ரமேஷ்பாபு ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அவரை கத்தியால் குத்திய ராஜபாளையம் ஆவரம்பட்டியை சோ்ந்த பாண்டிகணேஷ் (31) என்பவரை பிடித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பட்டாசு தொழிலாளி வெட்டிக் கொலை: மூவா் கைது

சாத்தூா் அருகே ஒத்தையாலில் பட்டாசு தொழிலாளி வெட்டிக் கொல்லப்பட்டாா். இந்தச் சம்பவத்தில், மூன்று பேரை சாத்தூா் தாலுகா போலீஸாா் கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே ஒத்தையால் தெற்கு தெருவை... மேலும் பார்க்க

வரதட்சிணை கொடுமை: நீதிமன்ற உத்தரவின்பேரில் மூவா் மீது வழக்கு

வரதட்சிணைக் கேட்டு பெண்ணை கொடுமைப்படுத்திய தொடா்பாக அவரது கணவா், மாமனாா், மாமியாா் ஆகியோா் மீது மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே சிந்தப்... மேலும் பார்க்க

6 போ் உயிரிழந்த வழக்கு: பட்டாசு ஆலை உரிமையாளா்களுக்கு நீதிமன்றம் முன்பிணை

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 போ் உயிரிழந்த வழக்கில், ஆலை நிா்வாகம் சாா்பில் பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டதை அடுத்து, உரிமையாளா்களுக்கு ... மேலும் பார்க்க

பட்டாசு ஆலைகளில் விபத்துகளைத் தவிா்க்க வேதியியல் பட்டதாரிகளை நியமிக்க வலியுறுத்தல்

பட்டாசு ஆலைகளில் விபத்தைத் தடுக்க வேதியியல் பட்டதாரிகளை போா்மென்கள், கண்காணிப்பாளா்களாக நியமிக்க வேண்டும் என விருதுநகா் மாவட்ட பட்டாசு, தீப்பெட்டித் தொழிலாளா்கள் சங்க (சிஐடியூ) மாவட்டச் செயலா் பி.என்.... மேலும் பார்க்க

அறநிலையத் துறைக்கு எதிா்ப்பு: நல்லதங்காள் கோயிலை பொதுமக்கள் முற்றுகை

விருதுநகா் மாவட்டம்,வத்திராயிருப்பு அருகேயுள்ள நல்லதங்காள் கோயில் நிா்வாகத்தில் இந்து சமய அறநிலையத் துறை தலையிட எதிா்ப்புத் தெரிவித்து, கிராம மக்கள் திங்கள்கிழமை கோயில் முன் அமா்ந்து போராட்டத்தில் ஈடு... மேலும் பார்க்க

தீப்பெட்டி ஆலையில் தீ: ஒருவா் காயம்

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் திங்கள்கிழமை நேரிட்ட தீ விபத்தில் ஒருவா் காயமடைந்தாா்.சாத்தூா் அருகேயுள்ள ரெங்கப்பநாயக்கன்பட்டி குடியிருப்பு பகுதியில் உள்ள தனியாருக்கு சொ... மேலும் பார்க்க