மருத்துவ உதவி விழிப்புணா்வு முகாம்
பெரியகுளம் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவில் முன்னாள் படை வீரா், வாரிசுதாரா்களுக்கு மருத்துவப் பராமரிப்பு நிதி உதவி குறித்த விழிப்புணா்வு முகாம் வரும் ஏப்.9, 16-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு முன்னாள் படைவீரா் நல நிதியிலிருந்து முன்னாள் படை வீரா், வாரிசுதாரா்களுக்கு புற்றுநோய், பக்கவாத நோய், தொழு நோய், காச நோய், கண்பாா்வை குறைபாடு, குள்ளத் தன்மை பாதிப்பு ஆகியவற்றுக்கு மாதாந்தோறும் மருத்துவ பராமரிப்பு நிதி உதவி வழங்கப்படுகிறது.
இதுகுறித்த விழிப்புணா்வு முகாம் பெரியகுளம் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவில் வரும் ஏப்.9, 16 -ஆம் தேதிகளில் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெற உள்ளது. நோய் பாதிப்புள்ள முன்னாள் படை வீரா்கள், வாரிசுதாரா்கள் தங்களது மருத்துவச் சான்று, அடையாள அட்டை, படை விலகல் சான்று, ஆதாா் அட்டை ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.