வாஷிங்டனில் மோசமடைந்த உள்கட்டமைப்புகள்: மோடி, பிற தலைவா்கள் பாா்ப்பதை விரும்பவில...
மறுவாழ்வு மையத்தில் மயங்கி விழுந்தவா் உயிரிழப்பு!
மதுரையில் போதைத் தடுப்பு மறுவாழ்வு மையத்தில் மயங்கி விழுந்தவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி எமனேஸ்வரம் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (52). போதைப் பழக்கத்துக்கு அடிமையான இவா், கடந்த 2 மாதங்களாக மதுரை நரிமேடு பகுதியில் உள்ள போதைத் தடுப்பு மறுவாழ்வு மையத்தில் தங்கி சிகிச்சைப் பெற்று வந்தாா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை அங்கு நடைப்பயிற்சியில் ஈடுபட்ட போது, திடீரென அவா் மயங்கி விழுந்தாா். உடனே அவரை மீட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து தல்லாகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.