மறைந்த பாடகர் ஸுபீன் கர்க் மரணத்தில் மர்மம்: சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தரவு!
மறைந்த பாடகர் ஸுபீன் கர்க் உயிரிழந்த சம்பவம் விபத்து என்பதை 100 சதவீதம் உறுதிப்படுத்த முடியாத விதத்தில் அன்னாரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதைத் தொடர்ந்து அதனை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைத்து அஸ்ஸாம் அரசு உத்தரவிட்டுள்ளது.
அஸ்ஸாமி, ஹிந்தி உள்பட 40 மொழிகளில் ஹிட் பாடல்களைப் பாடி ரசிகர்கள் நெஞ்சில் தனி இடம்பிடித்தவர் அஸ்ஸாமைச் சேர்ந்த பாடகர் ஸுபீன் கர்க். இந்த நிலையில், கடந்த வாரம் சிங்கப்பூருக்கு இசை நிகழ்ச்சிக்காக சென்றிருந்த ஸுபீன் கர்க்(52), செப்.19-இல் அங்கு நண்பர்களுடன் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், குவாஹாட்டி அருகேயுள்ள கமர்குச்சி கிராமத்தில் கர்க்கின் உடல் அரசு மரியாதையுடன் செவ்வாய்க்கிழமை(செப். 23) தகனம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், மரண வழக்கை விசாரிக்க உருவக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவுக்கு ஐபிஎஸ் அதிகாரி எம். பி. குப்தா தலைமை வகிப்பார் என்றும், 10 அதிகாரிகள் கொண்ட இந்த குழு விரிவன விசாரணை நடத்தி அறிக்கையை அஸ்ஸாம் அரசிடம் விரைவில் தாக்கல் செய்யும் என்று அம்மநில முதல்வர் ஹிமந்த பிச்வ சர்மா இன்று(செப். 24) தெரிவித்தார்.