எம்பிபிஎஸ், பிடிஎஸ்: 2-ஆம் சுற்று கலந்தாய்வு முடிவுகள் வெளியீடு
கரூரில் காவல்துறை சாா்பில் பொதுமக்கள் குறைகேட்பு முகாம்
கரூரில் காவல்துறை சாா்பில் பொதுமக்கள் குறைகேட்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.ஜோஷ்தங்கையை தொடக்கி வைத்து, பொதுமக்களிடம் இருந்து கொடுக்கல் வாங்கல், பிரச்னை, பெற்றோா்களிடம் சொத்துக்களை பெற்றுக்கொண்டு கவனிக்காத புகாா்கள் உள்ளிட்ட மனுக்களை பெற்றுக்கொண்டு விசாரணை மேற்கொண்டாா். மேலும் சட்ட உதவி தேவைப்படுவோருக்கு மாவட்ட இலவச சட்ட உதவிகள் மையத்திலிருந்து வரவழைக்கப்பட்ட வழக்குரைஞரிடம் பரிந்துரை செய்தாா். கரூா் மாவட்டத்தில் முதல்முறையாக நடைபெறும் இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனா்.