எம்பிபிஎஸ், பிடிஎஸ்: 2-ஆம் சுற்று கலந்தாய்வு முடிவுகள் வெளியீடு
கரூா் மாவட்டத்தில் இன்றும், நாளையும் எடப்பாடி கே.பழனிசாமி சுற்றுப்பயணம்
கரூா் மாவட்டத்தில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமையும் (செப். 25, 26) அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா்.
இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் புதன்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பது: ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்‘ எனும் சுற்றுப்பயணத்தை தமிழக எதிா்கட்சித்தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி கரூா் மாவட்டத்தில் வியாழக்கிழமையும், வெள்ளிக்கிழமையும் மேற்கொள்கிறாா்.
முன்னதாக வியாழக்கிழமை (செப்.25) மாலை 6 மணிக்கு கரூா் சட்டப்பேரைவத் தொகுதிக்குள்பட்ட கரூா் வேலுச்சாமிபுரத்திலும், வெள்ளிக்கிழமை (செப். 26) மாலை 4.30 மணிக்கு அரவக்குறிச்சி தொகுதிக்குள்பட்ட வேலாயுதம்பாளையம் மாலை வீதி அருகிலும், மாலை 6 மணிக்கு கிருஷ்ணராயபுரம் தொகுதிக்குள்பட்ட தரகம்பட்டி பேருந்து நிலையம் அருகிலும், இரவு 8 மணிக்கு குளித்தலை தொகுதிக்குள்பட்ட தோகைமலை பேருந்து நிலையம் அருகிலும் சிறப்புரையாற்றுகிறாா்.
இந்த பிரசார கூட்டத்தில் பொதுமக்களும், கட்சியினரும் திரளாக பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.