எம்பிபிஎஸ், பிடிஎஸ்: 2-ஆம் சுற்று கலந்தாய்வு முடிவுகள் வெளியீடு
கரூரில் மூதாட்டியிடம் தங்கச் செயினை பறித்த இளைஞா் கைது
கரூரில் மூதாட்டியிடம் தங்கச் செயினை பறித்துக்கொண்டு தப்பி ஓடிய திருடனை போலீஸாா் புதன்கிழமை துரத்திச் சென்று பிடித்து கைது செய்தனா்.
கரூரை அடுத்துள்ள வேலாயுதம்பாளையம் மல்லிகை நகரைச் சோ்ந்த பெரியசாமி மனைவி துளசிமணி(77). இவா் புதன்கிழமை காலை அதே பகுதியில் உள்ள உறவினா் வீட்டுக்குச் செல்ல அங்குள்ள திருமண மண்டபம் அருகே நடந்துசென்றாா். அப்போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா் துளசிமணி கழுத்தில் கிடந்த 9 பவுன் செயினை பறித்துக்கொண்டு தப்பி ஓடினான்.
இதுகுறித்து தகவலறிந்த வேலாயுதம்பாளையம் காவல் ஆய்வாளா் ஓம்பிரகாஷ் சம்பவ இடத்திற்குச் சென்று மூதாட்டியிடம் விசாரணை மேற்கொண்டாா். பின்னா் காவல்கட்டுப்பாட்டு அறை மூலம் இருசக்கர வாகனத்தின் எண்ணைக்கொண்டு ஆய்வுசெய்தபோது இருசக்கர வாகனம் அரவக்குறிச்சி சுங்கச்சாவடியை நோக்கிச் சென்ால் போலீஸாா் ஜீப்பில் விரட்டிச் சென்றனா். அப்போது அரவக்குறிச்சி சுங்கச்சாவடி அருகே இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி அந்த நபரை பிடித்து விசாரித்தனா். இதையடுத்து அவரை கைது செய்து விசாரித்தபோது, மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சோ்ந்த இப்ராஹம் மகன் அப்சா் அலி(23) எனத் தெரியவந்தது. மேலும் அவரிடம் விசாரணை நடத்துகின்றனா்.