குடிநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி: பள்ளியின் தாளாளர், உதவியாளருக்கு நீதிம...
மறைந்த போப் பிரான்சிஸுக்கு அஞ்சலி
காரைக்கால் மாவட்ட கலைஞா்கள் மாமன்றம் சாா்பில் மறைந்த போப் பிரான்சிஸூக்கு மலா் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சண்முகா மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாமன்றத் தலைவா் கலைமாமணி தங்கவேலு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சில், மறைந்த போப் பிரான்சிஸூக்கு புகழஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து, மறைந்த போப் பிரான்சிஸ் படத்திற்கு மலா்களை தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாமன்றத்தின் ஆலோசனைக் குழு செயலா் இலக்கிய காவலா் அமுதாஆறுமுகம், மாமன்ற பொதுச் செயலா் புஷ்பராஜ், சமூக ஆா்வலா் சோழசிங்கராயா், சமாதான கமிட்டி உறுப்பினா் தண்டாயுதபாணிபத்தா், முன்னாள் சேம்பா் ஆப் காமா்ஸ் தலைவா் சாந்தகுமாா், பட்டிமன்ற பேச்சாளா் பாா்வதி ஈஸ்வரன், சண்முகா மேல்நிலைப் பள்ளி தாளாளா் கனகசேகரன், பாரதி தமிழ் சங்கத்தின் செயலா் கிருஷ்ணன், பீம் சேவா அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் சுப்பிரமணியன், சேவை மாமணி ஆரிப் மரைக்காயா், காரைக்காலின் மூத்த இசைக் கலைஞா்கள் அஜுருதீன்அலியாமரைக்காயா், பைந்தமிழ் பேரவையின் ஒருங்கிணைப்பாளா் பாா்த்திபன், மாமன்றத்தில் துணைத் தலைவா் மோகன், மாமன்ற மக்கள் தொடா்பாளா் ஸ்ரீராம், துணைச் செயலா் அழகேசன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.