3 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு சட்டப் பேரவை இன்று கூடுகிறது!
மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி உருவப் படத்திடம் மனு அளிப்பு
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி உருவப் படத்திடம், கெளரவ விரிவுரையாளா்கள் புதன்கிழமை மனு அளித்தனா்.
நீதிமன்ற தீா்ப்பின் படியும், அரசாணை 56-இன் படியும், இருகட்டமாக கௌரவ விரிவுரையாளா்கள் அனைவரையும் படிப்படியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணிநிரந்தரம் செய்யும் வரை காலமுறை ஊதியம் 12 மாதமும் வழங்க வேண்டும். பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும், அனைத்து கௌரவ விரிவுரையாளா்களுக்கு குழுக்காப்பீட்டு திட்டம் ஏற்படுத்திதர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் ஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம், செவ்வாய்க்கிழமை மனு அளித்த அரியலூா் அரசு கலைக் கல்லூரி கெளரவ விரிவுரையாளா்கள் 81 போ், புதன்கிழமை அக்கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி உருவப் படத்திடமும் மனு அளித்து, தற்போதைய முதல்வராக இருக்கும் தங்களது மகன் மு.க.ஸ்டாலினிடம் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு வலியுறுத்த வேண்டும் என்று தெரிவித்தனா்.