செய்திகள் :

மலேசியாவில் பேச்சுவார்த்தை; தாய்லாந்து - கம்போடியா போர் சூழல் முடிவுக்கு வருமா?

post image

எல்லைப் பிரச்னை காரணமாக தாய்லாந்து - கம்போடியா இடையே கடந்த வாரம் போர் தொடங்கியது.

'அவர்கள் தான் முதலில் தொடங்கினார்கள், இவர்கள் தான் முதலில் தொடங்கினார்கள்' என்று மாறி மாறி இரு நாடுகளும் குற்றம்சாட்டி வந்தன.

இந்தப் போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வந்தன. இதன் விளைவாக, தற்போது இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு சம்மதித்துள்ளது.

பேச்சுவார்த்தை எங்கே?

இந்தப் பேச்சுவார்த்தை இன்று மலேசியாவில் நடக்க உள்ளது.

தாய்லாந்தின் தற்காலிகப் பிரதமர் பும்தம் வெச்சயாச்சய் கலந்துகொள்கிறார்.

கம்போடியாவின் பிரதமர் ஹன் மானெட்டும் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கம்போடியாவின் பிரதமர் ஹன் மானெட்
தாய்லாந்தின் தற்காலிகப் பிரதமர் பும்தம் வெச்சயாச்சய் -

மலேசியா மற்றும் அமெரிக்கா

இந்தப் பிரச்னை தொடங்கிய உடனேயே, மலேசியாவின் பிரதமர் அன்வர் இப்ராஹிம் போர் நிறுத்தத்தை முன்மொழிந்தார். தாய்லாந்து, கம்போடியா பேச்சுவார்த்தைக்கு சம்மதித்ததில், இவருடைய முக்கியப் பங்கு உண்டு.

அடுத்ததாக, நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இரு நாடுகளின் பிரதமர்களுடனும் தொலைபேசி மூலம் பேசியிருந்தார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, அவர்கள் போரை நிறுத்தவில்லை என்றால், அவர்களுடன் உடனான அமெரிக்காவின் வணிக ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்" என்று பேசியிருந்தார்.

இன்று நடக்க உள்ள பேச்சுவார்த்தையில் என்ன முடிவு எடுக்கப்படுகிறதோ... அதைப் பொறுத்து தான் போர் நிறுத்தம் வருவதும்... வராததும்!

Bihar SIR: ``ஆதாரை குடியுரிமை ஆவணமாக ஏற்றுக்கொள்ளுங்கள்'' - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பீகாரில் 'சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணி' நடந்தது. அதில் தேர்தல் ஆணையம், 2003-ம் ஆண்டுக்கு பிறகு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டவர்கள், தங்களது குடியுரிமையை நிரூபிக்க அதற்கான ஆவணங்கள... மேலும் பார்க்க

மேற்கத்திய நாடுகள் எதிர்த்தும், இந்தியா ஏன் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்கிறது?

ரஷ்யா - உக்ரைன் போர் முற்றுப்பெறவில்லை என்றால், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சிரித்திருக்கிறார். ரஷ்யாவிடம் இருந்து கச்சா ... மேலும் பார்க்க

`பஹல்காம் தாக்குதல்' பா.சிதம்பரத்தின் பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம்!

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்றத் தகவல் வெளியானதிலிருந்து காங்கிரஸ் முத்த தலைவர் பா.சிதம்பரத்தின் கேள்விகளும் நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.... மேலும் பார்க்க

``பஹல்காம் தாக்குதல் நடத்தியவர்கள் பாகிஸ்தானில் இருந்து வந்தார்களா? ஆதாரம் இருக்கா?'' - பா.சிதம்பரம்

மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க அரசை பல்வேறு வகையில் சிக்கலில் ஆழ்த்தியிருக்கும் விவகாரங்களில் ஒன்று `ஆப்ரேஷன் சிந்தூர்' தாக்குதல். ஒருபக்கம் 'இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்' என... மேலும் பார்க்க

``சோழர்கள் வளர்த்த காவித்தமிழ்; ஸ்டாலின் ஏன் தனியார் ஆஸ்பத்திரிக்கு செல்கிறார்?'' - தமிழிசை கேள்வி

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தமிழகம் வரவிருக்கிறார். இன்றிரவு தூத்துக்குடி விமான நிலையம் வரவிருக்கும் அவரை வரவேற்க செல்கையில் தமிழிசை சௌந்தரராஜன் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார்.கங்கைகொண்ட சோழப... மேலும் பார்க்க

கங்கை கொண்ட சோழபுரம்: பிரதமர் மோடி வருகை, இளையராஜா சிம்பொனி இசை.. களைகட்டும் திருவாதிரை விழா!

மாமன்னன் இராஜேந்திர சோழனின் பிறந்தநாள் ஆடி திருவாதிரை விழாவாக கங்கை கொண்ட சோழபுரத்தில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 23-ம் தேதி தமிழக அரசு சார்பில் இராஜேந்திர சோழன் திருவாதிரை விழா கொ... மேலும் பார்க்க