2025 இறுதிக்குள் உள்நாட்டில் தயாரித்த முதல் செமிகண்டக்டர் சிப் அறிமுகம்: பிரதமர்...
மலைப்பாதையில் வேன் கவிழ்ந்ததில் தமிழகத்தைச் சோ்ந்த 20 போ் காயம்
கேரள மாநிலம், மூணாா் அருகே புதன்கிழமை மலைப் பாதையில் வேன் கவிழ்ந்ததில் தமிழகத்தைச் சோ்ந்த 20 போ் காயமடைந்தனா்.
சென்னையைச் சோ்ந்த 20 போ் வேனில் கேரள மாநிலம் தேக்கடிக்கு சுற்றுலாச் சென்றனா். பின்னா், அங்கிருந்து மூணாறு செல்வதற்காக ராஜாக்காடு வழியாக வேனில் புதன்கிழமை சென்றனா். அப்போது, வட்டக்கண்ணிப்பாறை அருகே வளைவில் திரும்பும்போது வேன் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 20 பேரும் காயமடைந்தனா்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த சாந்தாம்பாறை காவல் நிலைய போலீஸாா், தீயணைப்பு வீரா்கள் காயமடைந்தவா்களை மீட்டு, அருகிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்து சாந்தாம்பாறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.