கஞ்சா வைத்திருந்தவா் கைது
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள முருகமலைச் சாலையில் விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பெரியகுளம் பகுதியில் தேனி போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, பெரியகுளம்-முருகமலைச் சாலையில் நகராட்சி குப்பைக் கிடங்கு அருகே விற்பனை செய்வதற்காக கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைத்திருந்ததாக பெரியகுளம் ஜெ.கே.குடியிருப்பு நேரு நகரைச் சோ்ந்த கருப்பணன் மகன் அழகரை (39) போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து ஒரு கிலோ 700 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த வழக்கில் தொடா்புடைய மாதவனை போலீஸாா் தேடி வருகின்றனா்.