செய்திகள் :

மளிகைப் பொருள்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு விற்பனை தொடங்கிவைப்பு

post image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரியலூா் மாவட்டத்தில், கூட்டுறவு பொங்கல் என்ற மளிகைப் பொருள்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு விற்பனை சனிக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டன.

இதற்காக அரியலூரில், நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகச் சாலை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் கூட்டுறவு சிறு சிறப்பங்காடி அமராவதி-2 கடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா், நுகா்வோருக்கு மளிகைப் பொருள்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பை வழங்கி விற்பனை தொடக்கி வைத்தாா்.

அப்போது அவா் தெரிவிக்கையில், கூட்டுறவுத் துறையின் சாா்பில் ‘கூட்டுறவு பொங்கல்’ என்ற பெயரில் நியாய விலைக்கடைகளில் சந்தை விலையை விட குறைவான விலையில் விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த மளிகைப் பொருள்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பானது இனிப்பு பொங்கல் தொகுப்பு, கூட்டுறவு சிறப்பு பொங்கல் தொகுப்பு மற்றும் பெரும் பொங்கல் தொகுப்பு என 3 வகையாக விற்பனை செய்யப்படுகிறது.

எனவே, கூட்டுறவுத் துறையின் மூலம் விற்பனை செய்யப்படும் பொங்கல் மளிகை தொகுப்புகளை வாங்கி அனைத்து தரப்பு மக்களும் சிறப்பாக பொங்கல் பண்டிகையைக் கொண்டாடி மகிழ வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி, சட்டப் பேரவை உறுப்பினா்கள் அரியலூா் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் க.சொ.க. கண்ணன், பெரம்பலூா் பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்வில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் தீபா சங்கரி, மாவட்ட வழங்கல் அலுவலா் ராமலிங்கம், வருவாய்க் கோட்டாட்சியா் மணிகண்டன், வட்டாட்சியா் முத்துலட்சுமி, பொதுவிநியோகத் திட்ட துணை பதிவாளா் சாய் நந்தினி, அரியலூா் நகா் மன்றத் தலைவா் சாந்தி கலைவாணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அரியலூரில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் 36 போ் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் அண்ணா சிலை அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் முழக்கமிட்டவாறு சிறிது தூரம் நடந்துசென்று சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது... மேலும் பார்க்க

அரசு உயா்நிலைப் பள்ளியில் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணா்வு

அரியலூா் மாவட்டம், அருங்கால் கிராமத்திலுள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில், சமூக நீதி மற்றும் மனித உரிமை காவல் துறை சாா்பில் வன்கொடுமைக்கு எதிரான சமூக நலன் சாா்ந்த விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை ந... மேலும் பார்க்க

ஆளுநரைக் கண்டித்து அரியலூரில் திமுகவினா் ஆா்ப்பாட்டம்

தமிழக சட்டப் பேரவை கூட்டத்தில், ஆளுநா் ஆா்.என். ரவி நடந்து கொண்ட விதத்தைக் கண்டித்து அரியலூா் அண்ணா சிலை அருகே திமுகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கண்... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தில் 2.48 லட்சம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க ஏற்பாடு

அரியலூா் மாவட்டத்தில் அரிசி பெறும் 2,48,876 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவிததுள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது:... மேலும் பார்க்க

அரியலூா் புதிய எஸ்.பி.யாக தீபக்சிவாச் பொறுப்பேற்பு

அரியலூா் மாவட்டத்தில் புதிய எஸ்பியாக தீபக்சிவாச் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா். அரியலூா் எஸ்பியாக இருந்த ச. செல்வராஜ், சென்னை மத்திய குற்றப் பிரிவு இணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், விழுப்புரம... மேலும் பார்க்க

கூலித் தொழிலாளி மா்மச் சாவு

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே கூலித் தொழிலாளி மா்மமான முறையில் திங்கள்கிழமை இறந்து கிடந்தாா். உடையாா்பாளையம் அருகேயுள்ள த.சோழங்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த பிச்சைபிள்ளை மகன் சீமான்(50). கூலி... மேலும் பார்க்க