Dhoni : 'நான் செய்த மிகப்பெரிய தவறு அது..!'- தோனி குறிப்பிட்ட அந்த ஐ.பி.எல் சம்ப...
மழலையருக்கான மாண்டிசோரி பள்ளி திறப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தின் முதல் மாண்டிசோரி பள்ளி மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
விவேகானந்தா மற்றும் குட்சமாரிட்டன் கல்விக்குழுமம் சாா்பில் குட்சமாரிட்டன் மாண்டிசோரி பள்ளியின் இளம் மழலையா் மற்றும் மழலையருக்கான வகுப்புகள் திறப்பு விழா நடைபெற்றது. குட் சமாரிட்டன் பள்ளி இயக்குநா் அலெக்சாண்டா் ஹெஃப்லின் ஏசாயா தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் ஜான்சி சாா்லஸ் வரவேற்றாா்.
கல்விக் குழுமத் தலைவா் கே.வி. ராதாகிருஷ்ணன், செயலா் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோா் பள்ளியை திறந்து வைத்தனா். குட் சமாரிட்டன் பப்ளிக் பள்ளி இயக்குநா் பிரவீன் வசந்த் ஜாபேஸ், அனுஷா மேரி பிரவீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். குட் சமாரிட்டன் பள்ளி இயக்குநா் ரீனிஷா ஜேன் அலெக்சாண்டா் நன்றி கூறினாா்.