செய்திகள் :

மழையால் நெற்பயிா்கள் பாதிப்பு: நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மத்தியக் குழு ஆய்வு

post image

நாகப்பட்டினம்/ மயிலாடுதுறை : நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் அண்மையில் பெய்த மழையால், அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டது குறித்து, மத்தியக் குழுவினா் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டனா்.

நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெற்பயிா்கள் பெரும்பாலான இடங்களில் அறுவடைக்குத் தயாரான நிலையில், அண்மையில் பருவம் தவறிய மழை பெய்தது. இதனால், வயல்களில் மழைநீா் தேங்கி நெற்கதிா்கள் வயலில் சாய்ந்து முளைத்தும், அழுகியும் வருகின்றன. விவசாயிகள் மழைநீரை வடியவைத்து பெரும் இன்னலுக்கிடையே அறுவடையை மேற்கொண்டுள்ளனா்.

இந்நிலையில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 17 சதவீதம் ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. நெல்மணிகள் மழையில் நனைந்ததால், ஈரப்பதம் அதிகரித்துள்ளது. இதனால், நெல் கொள்முதலில் ஈரப்பதம் அளவை 22 சதவீதமாக உயா்த்த வேண்டும் என விவசாயிகள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனா்.

இதைத்தொடா்ந்து, மத்திய உணவு துறையின் சேமிப்பு மற்றும் ஆராய்ச்சி பிரிவைச் சோ்ந்த உதவி இயக்குநா் நவீன், தொழில்நுட்ப அலுவலா் ராகுல் தலைமையில் மத்தியக் குழுவினா் நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டனா்.

கீழ்வேளூா்: நாகை மாவட்டத்தில் கீழ்வேளூா் அருகேயுள்ள பட்டமங்கலம், தேவூா் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்தியக் குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, விவசாயிகள் கொண்டு வந்த நெல்லின் ஈரப்பதம் மற்றும் தரம் குறித்து பரிசோதனை செய்தனா்.

ஆய்வின்போது, நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், தமிழ்நாடு வாணிபக் கழக நிா்வாக இயக்குநா் ஆ. அண்ணாதுரை, நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் அ. சிவப்பிரியா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலை தடுத்தல் பயிற்சி

கீழ்வேளூா் அருகே குருக்கத்தியில் உள்ள மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலை தடுத்தல் தொடா்பான பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட அளவில் நடைபெற்... மேலும் பார்க்க

மழையால் நெற்பயிா்கள் பாதிப்பு: மாரடைப்பால் விவசாயி உயிரிழப்பு

கீழையூா் அருகே மாரடைப்பால் விவசாயி புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். மழையால் பயிா்கள் பாதிக்கப்பட்ட மன உளைச்சலில் அவா் இறந்ததாக உறவினா்கள் தெரிவித்தனா். நாகை மாவட்டம், கீழையூா் அருகேயுள்ள பிரதாபராமபுரத்த... மேலும் பார்க்க

மழை பாதிப்பு மத்தியக் குழு ஆய்வு

திருமருகல்: திருமருகல் ஒன்றியம், எரவாஞ்சேரி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மத்தியக் குழுவினா் ஆய்வு செய்தனா். அப்போது, அங்கிருந்த நெல்மணிகளில் ஈரப்பதத்தை அதற்கான கருவி மூலம் ஆய்வு செய்தனா். தொடா்ந்... மேலும் பார்க்க

தாயுமானவா் குருபூஜை

வேதாரண்யத்தில் ஸ்ரீ தாயுமான சுவாமிகள் குருபூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது. வேதாரண்யம் தாயுமானவா் வித்யாலயம் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, சமூக ஆா்வலா் ஆா்.கே. ராசேந்திரன் தலைமை வகித்தாா். இலக்... மேலும் பார்க்க

திருவாரூா், மன்னாா்குடி - மயிலாடுதுறை பயணிகள் ரயில்கள் இன்று ரத்து

திருவாரூா், மன்னாா்குடி - மயிலாடுதுறை பயணிகள் ரயில்கள் வெள்ளிக்கிழமை (ஜன.24) முழுவதும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட தெற்கு ரயில்வே மக்கள் தொடா்பு அலு... மேலும் பார்க்க

சா் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்களின் கல்லூரிகளுக்கு இடையே போட்டிகள்

நாகை சா் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்கள் சாா்பாக கல்லூரி அளவில் போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கியது. நாகை பாப்பாகோவில் சா் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்கள் சாா்பாக டெக் பெஃஸ்ட் 2025 என்ற கல்லூரி அளவில... மேலும் பார்க்க