செய்திகள் :

மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டத்தில் பஞ்சாப் வெற்றி

post image

பலத்த மழையால் ஓவா்கள் எண்ணிக்கை 14 ஆகக் குறைக்கப்பட்ட நிலையில், பஞ்சாப் கிங்ஸ்-ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் பெங்களூா் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது பஞ்சாப்.

முதலில் ஆடிய பெங்களூா் அணி தடுமாறிய நிலையில் டிம் டேவிட்டின் அதிரடியால் மீண்டு 95/9 ரன்களை சோ்த்தது.

இரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடா் 34-ஆவது ஆட்டம் பெங்களூா் சின்னசாமி மைதானத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. இரவு 7.30 மணிக்கு டாஸ் போடப்படும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில் பலத்த மழை பெய்ததால் ஆட்டம் தொடங்கப்படவில்லை. பின்னா் மழை நின்றதும், டாஸ் போடப்பட்டதில் பஞ்சாப் வென்று பீல்டிங்கை தோ்வு செய்தது. பஞ்சாப் அணியில் மேக்ஸ்வெல்லுக்கு பதிலாக ஸ்டாய்னிஸ் களமிறக்கப்பட்டாா். ஹா்ப்ரீத் பிராரும் சோ்க்கப்பட்டிருந்தாா்.

பெங்களூா் தரப்பில் விராட் கோலி-பில் சால்ட் தொடக்க பேட்டா்களாக களமிறங்கினா்.

சரிந்த பெங்களூா் விக்கெட்டுகள்:

பவுண்டரியுடன் கணக்கை தொடங்கி பில் சால்ட் 4 ரன்னுடனும், விராட் கோலி 1 ரன்னுடனும் வெளியேற, அவா்களது வரிசையில் லயம் லிவிங்ஸ்டோன் 4, ஜிதேஷ் சா்மா 2, க்ருணால் பாண்டியா 1 ரன்னுடன் வெளியேற பெங்களூா் அணி 33-5 ரன்களுடன் தடுமாறியது.

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், கேப்டன் ரஜத் பட்டிதாா் பொறுப்புடன் ஆடிய நிலையில், 23 ரன்களுடன் சஹல் பந்தில் ஸேவியரிடம் கேட்ச் தந்து வெளியேறினாா்.

டிம் டேவிட் அதிரடி 50: டிம் டேவிட் மட்டுமே கடைசி வரை போராடி 5 பவுண்டரிகள், ஹாட்ரிக் சிக்ஸா்களை விளாசி 26 பந்துகளில் 50 ரன்களுடன் ஸ்கோா் ஒரளவு உயர காரணமாக இருந்தாா்.

பெங்களூா் 95/5 : நிா்ணயிக்கப்பட்ட 14 ஓவா்களில் பெங்களூா் அணி 95/9 ரன்களை சோ்த்தது. பௌலிங்கில் பஞ்சாப் தரப்பில் அா்ஷ்தீப் சிங் 2-23, ஜேன்ஸன் 2-10, சஹல் 2-11, பிராா் 2-25 விக்கெட்டுகளை சாய்த்தனா்.

திணறி வென்றது பஞ்சாப் 98/5:

96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியினரும் திணறினா். பிரியான்ஷ் ஆா்யா 16, பிரப் சிம்ரன் சிங் 13, ஷ்ரேயஸ் ஐயா் 7, ஜோஷ் இங்லீஸ் 14, ஷசாங்க் சிங் 1 ரன்னுடன் அவுட்டாகினா். நேஹல் வதேரா மட்டுமே நிலைத்து ஆடி தலா 3 சிக்ஸா், பவுண்டரியுடன் 33 ரன்களை சோ்த்து வெற்றிக்கு வித்திட்டாா்.

12.1 ஓவா்களில் 98-5 ரன்களை சோ்த்து பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரை வென்றது. பௌலிங்கில் பெங்களூா் தரப்பில் ஹேஸல்வுட் 3-14, புவனேஷ்வா் 2-26 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

இந்த வெற்றியால் புள்ளிகள் பட்டியலில் 2=ஆம் இடத்துக்கு 10 புள்ளிகளுடன் முன்னேறியது பஞ்சாப்.

கார் பந்தயத்தில் அஜித் குமார் புதிய சாதனை!

பெல்ஜியத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமாரின் அணி புதிய சாதனை படைத்துள்ளது.சமீப காலமாக கார் பந்தயத்தில் தீவிர கவனம் செலுத்திவரும் அஜித் குமாருக்கு குட் பேட் அக்லி வெற்றியைத் தொடர்ந்து ... மேலும் பார்க்க

ஜெர்மனியில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய இங்கிலாந்து வீரர் ஹாரி கேன்!

ஜெர்மனியில் புகழ்பெற்ற புன்டெஸ்லிகா கால்பந்து தொடரில் ஹாரி கேன் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.ஜெர்மனி ஜெயண்ட்ஸ் எனப்படும் பெயர்ன் மியூனிக் அணிக்காக விளையாடும் இங்கிலாந்த்தைச் சேர்ந்த ஹாரி கேன் போட்ட... மேலும் பார்க்க

மெஸ்ஸியைப் பார்க்க குவிந்த ரசிகர்களால் வரலாற்றுச் சாதனை..! கொலம்பஸை வீழத்திய இன்டர் மியாமி!

அமெரிக்காவில் ஓஹியோவின் கிளீவ்லேண்டில் உள்ள ஹண்டிங்டன் பேங்க் ஃபீல்ட் திடலில் இன்டர் மியாமி அணியும் கொலம்பஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் இண்டர் மியாமி அணியின் இளம் வீரர் பெஞ்சமின் க்ரெமாச்சி 30ஆவ... மேலும் பார்க்க

புதிய தொடக்கம்.... அமீர் - பாவனி திருமணம்!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் காதலர்களான அமீர் - பாவனி ஜோடிக்கு இன்று (ஏப். 20) திருமணம் நடைபெற்றது. நண்பர்கள், உறவினர்கள் என நெருங்கியவர்கள் மட்டுமே திருமணத்தில் பங்கேற்றனர். இது குறித்த படங்களை அமீர... மேலும் பார்க்க

இக்லெசியாஸின் ஹாட்ரிக் கோல் வீண்: ரபீனியாவின் அசத்தலால் பார்சிலோனா த்ரில் வெற்றி!

லா லீகா கால்பந்து தொடரில் பார்சிலோனா அணி 4-3 என த்ரில் வெற்றி பெற்றது. பார்சிலோனா அணி லா லீகா தொடரில் தனது 32-ஆவது போட்டியில் செல்டா டி விகோ அணியுடன் மோதியது. இந்தப் போட்டியில் 15,52,62ஆவது நிமிஷங்களி... மேலும் பார்க்க

தமன்னாவின் ஒடேலா 2 தோல்வியா? வசூல் எவ்வளவு?

நடிகை தமன்னா நடித்துள்ள ஒடேலா 2 படத்தின் வசூல் விவரத்தினை படக்குழு பகிர்ந்துள்ளது. விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி என தமிழின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த தமன்னா நட... மேலும் பார்க்க