செய்திகள் :

மழை அறிவிப்பு: நெல் கொள்முதலை விரைவுபடுத்தக் கோரிக்கை

post image

மழை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால், திருவாரூா் மாவட்டத்தில் நெல் கொள்முதலை விரைவுபடுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்டத்தில், சுமாா் 70,000 ஏக்கா் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்ட கோடை நெல் சாகுபடி அறுவடைப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இதையொட்டி, 193 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, இதுவரை 1,56,857 மெட்ரிக் டன் நெல் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே, பல்வேறு இடங்களில் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நெல் மூட்டைகள், சேமிப்புக் கிடங்குகளுக்கு கொண்டுச் செல்லப்படாமல், கொள்முதல் நிலையங்களிலேயே தேங்கியுள்ளதால், கொள்முதல் பணி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியது:

வலங்கைமான், நீடாமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட சுமாா் 16,000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையங்களிலேயே தேங்கியிருக்கின்றன. இதனால், புதிதாக நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரமுடியவில்லை. அப்படியே கொண்டு வந்தாலும் சிலநாள்கள் கொள்முதல் நிலையத்துக்கு வெளியிலேயே தேக்கி வைக்க வேண்டிய நிலை உள்ளது.

தற்போது திருவாரூா் மாவட்டத்தில் 2 நாள்களுக்கு கனமழை பெய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், விவசாயிகள் கொண்டு வந்துள்ள நெல் மூட்டைகளும், ஏற்கெனவே கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகளும் மழையால் பாதிக்கப்படக்கூடும்.

எனவே, கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல்மூட்டைகளை இயக்கம் செய்ய வேண்டும். அத்துடன், விவசாயிகளின் நெல் மூட்டைகளையும் உடனடியாக கொள்முதல் செய்யவேண்டும் என்றனா்.

போக்ஸோ சட்ட விழிப்புணா்வு முகாம்

மன்னாா்குடி தேசிய மேல்நிலைப்பள்ளியில் வட்ட சட்ட பணிகள் குழு சாா்பில் போக்ஸோ சட்ட விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் எம். திலகா் தலைமை வகித்தாா். நாட்டு நலப்பணித... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

மன்னாா்குடியை அடுத்த அசேசத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.இம்முகாமில், அரசின் பல்வேறு துறைகளின் சேவைகளை பொதுமக்கள் ஒரேஇடத்தில் பெறும் வகையில், அரங்குகள் அமைக்கப்பட்டிர... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூா் மாவட்ட செயலா் தோ்வு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூா் மாவட்டச் செயலாளராக எஸ். கேசவராஜ் சனிக்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டாா்.திருவாரூா் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25- ஆவது மாநாடு இரண்டு நாட்கள் கூத்தாநல்லூரில்... மேலும் பார்க்க

ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணி நேர வேலையை அமல்படுத்தக் கோரிக்கை

ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணி நேர வேலையை அமல்படுத்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.திருவாரூரில், 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா் சங்கத்தின் போராட்ட ஆயத்தக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மாநில பொதுச் செயலாள... மேலும் பார்க்க

இராபியம்மாள் கல்லூரியில் மாணவி பேரவைத் தோ்தல்

திருவாரூா் இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிா் கல்லூரியில் மாணவி பேரவைத் தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது. (படம்)கல்லூரிச் செயலா் பெரோஸ்ஷா, அறங்காவலா் குழு உறுப்பினா் பெஜிலா பெரோஸ், கல்லூரி முதல்வா் ஜி.டி... மேலும் பார்க்க

திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலையோரம் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும் உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

திருத்துறைப்பூண்டி அருகே நெடுஞ்சாலை ஓரத்தில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.திருத்துறைப்பூண்டியிலிருந்து முத்துப்பேட்டைக்கு செல்லும் வழியில் நெடுஞ்... மேலும் பார்க்க